Pages

Sunday, January 17, 2016

1,105 தனியார் தமிழ் வழி பள்ளிகளை மூடப்போவதாக நிர்வாகிகள் எச்சரிக்கை.

கல்வித்துறையால் கொண்டு வரப்பட்ட,14 (ஏ) சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால், தனியார் தமிழ்வழிப் பள்ளிகளை, வரும் கல்வியாண்டில் மூடிவிடுவோம்' என, அதன் நிர்வாகிகள் எச்சரித்துள்ளனர்.தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் மற்றும் ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில செயற்குழு கூட்டம், திருச்சியில் நடந்தது. குறைந்த சம்பளம்கூட்டத்தில், தமிழ்நாடு தமிழ்வழிப் பள்ளி நிர்வாகிகள் கூட்டமைப்பின் மாநில பொதுச் செயலர் செபாஸ்டியன் கூறியதாவது:


தமிழகத்தில், 1991ல், தி.மு.க., ஆட்சியில், தனியார் தமிழ்வழி தொடக்கப் பள்ளி, தரம் உயர்த்தப்பட்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு சம்பளம் வழங்குவதை தடுக்கும் வகையில், 14 (ஏ) சட்டம் இயற்றப்பட்டது. இதனால், மாநிலம் முழுவதுமாக, 1,105 பள்ளிகளில் பணிபுரியும், 8,000 ஆசிரியர்கள், தற்போது வரை குறைந்தபட்ச சம்பளம் வாங்கி சிரமப்படுகின்றனர். 



தாய்மொழிக் கல்வி பயிலும் மாணவர்களுக்கு கல்வி பயிற்றுவிக்கும் ஆசிரியர்களுக்கு, மாணவர்களிடம் பணம் வசூலித்து, சம்பளம் வழங்கும்நிலை உள்ளது. தமிழ்வழிக் கல்வி பள்ளிகளை துவங்க அனுமதித்த தமிழகஅரசு, பள்ளி ஆசிரியர்களுக்கு, 24 ஆண்டுகளாக சம்பளம் வழங்காததைவன்மையாக கண்டிக்கிறோம். எனவே, 14 (ஏ) தடை சட்டத்தை விலக்கி,ஆசிரியர்களுக்கு சம்பள நிலுவையை வழங்க வேண்டும்.

செலவு ஏற்படாது

இதற்காக அரசு, புதிதாக நிதி ஒதுக்கீடு செய்யத் தேவையில்லை. திரும்ப ஒப்படைக்கப்படும் ஆசிரியர் பணியிடங்களை வழங்கினால் போதும்; இதனால், அரசுக்கு செலவு ஏற்படாது. மறுத்தால், எதிர்வரும் கல்வியாண்டில், தமிழகத்திலுள்ள தமிழ்வழிப் பள்ளிகளை மூடும் சூழல் ஏற்படும். ஆறு லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாவதை தடுப்பது, தமிழக அரசின் முடிவில் தான் உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.