Pages

Wednesday, December 30, 2015

அரசு விடுதி கட்டுமானப் பணிகள்: பள்ளி மாணவிகள் பரிதவிப்பு

அரசு விடுதி கட்டுமானப் பணிகள் முடங்கியுள்ளதால் மாணவிகள் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். பரமக்குடியில் சீர்மரபினர், பிற்பட்டோர் வகுப்பைச் சேர்ந்த பள்ளி மாணவிகளுக்கான விடுதிகள் கடந்த 20 ஆண்டுகளாக தனியார் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகிறது.

இங்கு அரசு, அரசு உதவிபெறும் பள்ளிகளில் படிக்கும் 70 மாணிவிகள் தங்கியுள்ளனர். போதிய வசதிகள் இல்லாததால் மாணவிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகிவருகின்றனர். அரசு விடுதிகளில் தங்கி படிக்க தகுதியிருந்தும் வேறுவழியின்றி மாணவிகள் பலர் தனியார் விடுதிகளில் தங்கி படிக்கவேண்டிய அவலம் உள்ளது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக பரமக்குடி வாரச்சந்தை வளாகத்தில் விடுதிகள் கட்ட அரசு அனுமதி வழங்கியது. இதற்காக ரூ.86.12 லட்சம் ஒதுக்கீடு பெற்று கடந்த 2012 அக்.,8ல் கட்டுமானப் பணிகள் துவங்கியது.

பணிகளை முழுமையாக முடித்து 2014 ஜூனில் ஒப்படைக்குமாறு காலக்கெடு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் 18 மாதங்கள் கடந்தும் விடுதி கட்டுமானப் பணிகள் முழுமையடையவில்லை. ஆமைவேகத்தில் நடந்த மணிகள் கடந்த 8 மாதமாக கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் கட்டடத்தின் மாடியில் மழைநீர் தேங்கி சிமென்ட் பூச்சுகள் உதிர்ந்து விழுவதால் கட்டடம் வலுவிழந்து வருகிறது. மாணவிகளின் நலன்கருதி விடுதி கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவேண்டும். பொதுப்பணித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில்,""விடுதி கட்டுமானப் பணிகளை முழுமையாக முடிக்க இன்னும் ரூ.15 லட்சம் தேவைப்படுகிறது. அரசிடம் இருந்து நிதி வந்தவுடன் பணிகள் முழுமையாக முடிக்கப்பட்டு ஒப்படைக்கப்படும்,'' என்றார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.