Pages

Tuesday, December 22, 2015

மத்திய ஆசிரியர் தகுதித் தேர்வு!

நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ., ஆரம்ப நிலை மற்றும் நடுநிலைப் பள்ளிகளில், ஆசிரியராக பணிபுரிவதற்கான தகுதித்தேர்வே ’சென்ட்ரல் டீச்சர் எலிஜிபிலிட்டி டெஸ்ட்’ (சி.டி.இ.டி.,).


எந்தெந்த பள்ளிகள்?

மத்திய அரசு பள்ளிகளான கேந்திரிய வித்யாலயா, நவோதயா, அரசு உதவி பெறும் பள்ளிகள், அரசு உதவி பெறாத தனியார் பள்ளிகள், சைனிக் உள்ளிட்ட பள்ளிகளில், 1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ஆசிரியர்களை நியமிப்பதற்கு, மத்திய அரசின் மனித வள அமைச்சகத்தின் சார்பாக, மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (சி.பி.எஸ்.இ.,) ஆசிரியர் தகுதி தேர்வானது (சி..டி.இ.டி.) நடத்தப்படுகிறது.

இருநிலைத் தேர்வு

இரண்டு தேர்வு தாள்களை கொண்ட  சி.டி.இ.டி., தேர்வில், ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் முதல் தாளையும், ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை ஆசிரியராக பணிபுரிய விரும்புபவர்கள் இரண்டாம் தாளையும் எழுத வேண்டும்.

ஆரம்பப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி இரண்டிலும் (1ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை) ஆசிரியர் ஆக பணியாற்ற விரும்புவோர் இரு தேர்வு தாள்களையும் எழுத வேண்டும்.

கல்வித் தகுதி

ஆரம்ப வகுப்புகளான ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான ஆசிரியர் பணிக்கு பிளஸ் 2வில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்று இரண்டு ஆண்டுகள் கொண்ட, ‘டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன்’ படிப்பை முடித்திருக்க வேண்டும்.

6 முதல் 8ம் வகுப்பு வரையிலான ஆசிரியர்  பணிக்கு, ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன், ‘டிப்ளமோ இன் எலிமெண்டரி எஜூகேஷன்’ படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அல்லது ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் பி.எட்., பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

தேர்வு விவரம்

தேர்வு நாள்: பிப்ரவரி  21, 2016

தாள் 1: ஆரம்பப் பள்ளி (1முதல் 5ம் வகுப்பு) ஆசிரியர்களுக்கான தேர்வு, பகல் 2 மணி முதல் 4.30 மணி வரை.

தாள் 2: நடுநிலைப் பள்ளி (6 முதல் 8ம் வகுப்பு) ஆசிரியர்களுக்கான தேர்வு, காலை 9.30 முதல் 12 மணி வரை.

இடஒதுக்கீடுப் பிரிவில் உள்ளோருக்கு 5 சதவீதம் தளர்வு அளிக்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் முறை: இத்தேர்வுக்கு www.ctet.nic.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்-லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

வின்ணப்பிக்க கடைசி நாள்: டிசம்பர் 28

மேலும் விவரங்களுக்கு: www.ctet.nic.in

1 comment:

  1. Enter your comment... sir B.lit. tamil.Bed. and. ...B.A.Economics.M.A. Economics...B.ed. patithavarkal ctet eludhalama solluga sir

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.