Pages

Sunday, December 27, 2015

எட்டு ஆண்டாக முடங்கிய ஆசிரியர் பயிற்சி படிப்பு

மத்திய அரசின் கல்வி உரிமைச் சட்டம் மற்றும் புதிய பாடத் திட்டங்களின் படி, செயல்வழிக் கற்றல் முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த முறையில் ஓவியம், இசை, தையல், ஆடை வடிவமைப்பு உள்ளிட்ட தனித்திறன்களுக்கு, அதிக முக்கியத்துவம் தரப்படுகிறது.


இதை பயிற்றுவிக்க, அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு, அதிக அளவில் கலை ஆசிரியர்கள் தேவைப்படுகின்றனர். கலை ஆசிரியராக விரும்புவோர், பிளஸ் 2 முடித்து, தமிழக அரசின் தேர்வுத் துறை நடத்தும் தொழில்நுட்ப தேர்வில், தேர்ச்சி பெற வேண்டும். பின், அவர்கள், டி.டி.சி., எனப்படும் மூன்று மாத ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடித்து, சான்றிதழ் பெற வேண்டும். இந்த சான்றிதழ் படிப்பு, 2007ம் ஆண்டு வரை, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் மாவட்ட வளாகங்களில், பள்ளிக் கல்வித் துறையால் நேரடியாக நடத்தப்பட்டன. ஆனால், 2007க்கு பின், ஆசிரியர் பயிற்சிப் படிப்பு முடக்கப்பட்டுள்ளது. அதனால், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தகுதிகள் இருந்தும், பணியில் சேர முடியாமல் தவிக்கின்றனர். 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.