டில்லியில் அப்துல்கலாம் பெயரில் அறிவுசார் மையம்&' அமைக்க முதல்வர் கெஜ்ரிவால் உறுதியளித்துள்ளார், என அம்மாநில கலாசாரத்துறை தலைமை மேலாளர் மனோஜ்குமார் தெரிவித்தார்.
அதில் கலாமின் உடைமைகள் இடம்பெறவேண்டும் என்பதற்காக, டில்லி மாநில சுற்றுலா மற்றும் கலாசாரத்துறை தலைமை மேலாளர் மனோஜ்குமார், துணை செயலாளர் பல்வன்சிங் வசிஷ்ட், கலை நிபுணர் சஞ்சய் கார்க் ஆகியோர் நேற்று ராமேஸ்வரம் வந்தனர். கலாம் பயன்படுத்திய 2,௦௦௦ புத்தகங்கள், மாணவர்கள் மத்தியில் உரையாற்றிய வீடியோ சிடி, வீணை உள்ளிட்ட சில பொருட்களை கலாமின் அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயர், பேரன் சலீம் ஆகியோர் டில்லி அதிகாரிகளிடம் வழங்கினர். தாய்த்தமிழ் அறக்கட்டளை தலைவர் பழனிச்சாமி உடனிருந்தார்.
மேலாளர் மனோஜ்குமார் கூறியதாவது:
டில்லியில் கலாம் பெயரில் அறிவுசார் மையம் அமைக்க முதல்வர் கெஜ்ரிவால் உறுதியாக உள்ளார். கலாமின் உடைமைகளை முதல்வரிடம் ஒப்படைத்து, டில்லியில் முக்கியமான இடத்தில் அறிவுசார் மையம் விரைவில் அமைக்கப்படும், என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.