Pages

Saturday, December 26, 2015

அரசு கல்லூரிகளில் மீண்டும் சிறப்பு வகுப்பு

அரசு கல்லுாரிகளில், ஆங்கிலம், கணிதம் மற்றும் அறிவியல் மாணவர்களுக்கான சிறப்பு வகுப்புகளை, மீண்டும் நடத்த உயர் கல்வித்துறை உத்தர விட்டுள்ளது. தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மை மாணவர்கள், கணிதம், அறிவியல் மற்றும் ஆங்கிலப் பாடங்களில் பின் தங்கியிருப்பதை, பல்கலை மானிய குழுவான, யூ.ஜி.சி., கண்டறிந்தது.இதையடுத்து சிறப்பு வகுப்புகள் நடத்தி, அந்த மாணவர்களை முன்னேற்ற, பேராசிரியர்களுக்கு கூடுதலாக, 10 ஆயிரம் ரூபாய் ஊதியம் அளிக்க அரசு உத்தரவிட்டது.

இதன்படி, 2012 வரை சிறப்பு வகுப்புகள் நடந்தன. இதற்கான நிதியில் முறைகேடு நடப்பதாக புகார் எழுந்தது. அதனால், மூன்று ஆண்டுகளாக இந்த நிதி நிறுத்தப்பட்டு, சிறப்பு வகுப்புகள் நடக்கவில்லை.மீண்டும் வகுப்புகள் நடத்த நிதி தருவதாக, உயர் கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன் படி, ஒவ்வொரு பேராசிரியரும், வாரம்தோறும் கூடுதலாக, ஒரு மணி நேரம் பாடம் நடத்த வேண்டும். இந்த வகுப்பை, சனி, ஞாயிறு நடத்த வேண்டும் என,
மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.