Pages

Wednesday, December 23, 2015

தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம்!

தமிழக சட்டசபைக்கு வருகிற மே மாதம் தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தேர்தலுக்கான புதிய வாக்காளர் பட்டியல் தயாரிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. அடுத்த மாதம் (ஜனவரி) 20–ந் தேதி புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.இந்த பட்டியலில் பெயர் விடுபட்டவர்கள்,
முகவரி மாறியவர்கள், திருத்தங்கள் செய்ய விண்ணப்பிக்க அனுமதி அளிக்கப்படுகிறது.


தற்போது மழை–வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் வாக்காளர் அடையாள அட்டையை இழந்தவர்களுக்கு புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டு வருகிறது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களில் மட்டும் புதியவாக்காளர் அடையாள அட்டை கேட்டு இதுவரை 15 ஆயிரம் விண்ணப்பம் கொடுத்துள்ளனர்.இவர்களுக்கு ஜனவரி முதல் வாரம் புதிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்பட உள்ளது.

இந்த பணிகளை தொடர்ந்து வாக்குப் பதிவு எந்திரங்களை தயார் நிலையில் வைக்க 75 ஆயிரம் வாக்குப்பதிவு எந்திரங்கள் பீகார், மகராஷ்டிரா, குஜராத் ஆகிய மாநிலங்களில் இருந்து வரவழைக்கப்படுகின்றன.தமிழகம், புதுச்சேரி, கேரளா, மேற்கு வங்காளம், அசாம் ஆகிய 5 மாநிலங்களில் மே மாதத்திற்குள் பொதுத் தேர்தல்களை நடத்தி முடிக்க வேண்டியிருப்பதால் இந்திய தேர்தல் ஆணையர்கள் ஒவ்வொருமாநிலத்திற்கும் சென்று தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசித்து வருகின்றனர்.முதற்கட்டமாக இந்திய தேர்தல் ஆணையர்கள் நேற்று அசாம் மாநிலத்திற்குசென்று ஆலோசனை நடத்தினார்கள்.சென்னைக்கு அடுத்த மாதம் 25–ந் தேதி ஆலோசனை நடத்த வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தலாமா? அல்லது 2 கட்டமாக தேர்தல் நடத்துவதா? என்பது பற்றி அனைத்து கட்சிபிரதிநிதிகளை அழைத்து தேர்தல் கமிஷனர்கள் கருத்து கேட்க உள்ளனர்.5 மாநிலங்களிலும் தேர்தல் நடத்துவதற்கான கருத்து கேட்பு முடிந்ததும், பொதுத்தேர்தல் நடத்துவதற்கான அட்டவணையை பிப்ரவரி மாதம் கடைசியில் தேர்தல் கமிஷனர்கள் வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.