Pages

Saturday, December 12, 2015

துணைத்தேர்வு சான்றிதழ் பெற அவகாசம்

பத்தாம் வகுப்பு துணைத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, சான்றிதழ் வழங்க, அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது.அரசு தேர்வுத் துறை இணை இயக்குனர் அமுதவல்லி வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பு:பத்தாம் வகுப்பு துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு, அசல் மதிப்பெண் சான்றிதழை, டிச., 11ம் தேதிக்குள், தேர்வு மையங்களில் பெற்று கொள்ள அறிவுறுத்தப்பட்டிருந்தது.

மழையால், மாணவர்கள் சான்றிதழ்களை பெற முடியவில்லை.எனவே, தனித்தேர்வர்கள், டிச., 18ம் தேதி வரை, ஞாயிறு தவிர, பிற நாட்களில், தேர்வு மையங்களில் சான்றிதழ்களை பெறலாம். அதன்பின், தேர்வுத் துறை மண்டல இணை இயக்குனர் அலுவலகத்தில் பெறலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.