Pages

Friday, December 4, 2015

இஎம்ஐ உள்ளிட்டவற்றை செலுத்த கூடுதல் அவகாசம் வேண்டும்: வங்கிகளுக்கு பொதுமக்கள் கோரிக்கை

மழை வெள்ளத்தால் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில் இஎம்ஐ உள்ளிட்ட மாதாந்திர ஈவுகளை செலுத்துவதற்கு வங்கிகள் கூடுதல் அவகாசம் அளிக்க வேண்டும் என்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


வட கிழக்கு பருவ மழை தீவிரமடைந்ததால் சென்னையில் பலத்த பெய்து பெரும் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரி திறந்துவிடப்பட்டதால், அடையாறு நிரம்பி பல இடங்களில் தண்ணீர் புகுந்துள்ளது.

ஒரு பக்கம் வெள்ளம், மறுபுறம் ஆறுகள் உடைப்பெடுத்து வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்துள்ளதால், பொது மக்களின் இயல்பு வாழ்க்கை பெரியளவு பாதிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன் நெட் பேங்கிங், போன் பேங்கிங் உள்ளிட்ட சேவைகளும் கிடைப்பது கடினமாக உள்ளது. பல ஊர்களில் மின்சாரம் இல்லாத நிலை.

பொதுமக்கள் பலர் உயிர் பிழைத்தால் போதுமென்று கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு போன்ற வற்றை வீடுகளிலேயே வைத்துவிட்டு வெளி யேறியுள்ளனர். சிலரது அட்டை கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப் பட்டுள்ளன. இந்த சூழலில் 4 அல் லது 5 தேதிக்குள் வங்கி இஎம்ஐ, கிரெடிட் கார்டு தொகை போன்ற வற்றை செலுத்த சொல்லி வங்கிகள் எஸ்எம்எஸ் அனுப்புகின்றன.

வங்கிகள் சொல்கிற தேதியில் பணத்தை கட்டாவிட்டால் அபரா தத் தொகை விதிக்கப்படும் என்று கூறப்படுகிறது.

பொதுமக்களின் இயல்பு நிலை பாதிக்கப்பட்டுள்ள சூழலில், இஎம்ஐ போன்றவற்றை செலுத்த வங்கிகள் மனிதாபிமான அடிப்படையில் கூடுதல் அவகாசம் தர வேண்டும். குறிப்பாக பி.எஸ்.என்.எல். உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு இலவச சேவை வழங்கியுள்ளது.

இந்நிலையில், தேசிய, தனியார் வங்கிகளும் உடனடியாக இக் கோரிக்கையை பரிசீலித்து ஆவன செய்ய வேண்டும். இதுகுறித்த தகவல்களை ஒவ்வொரு வாடிக்கையாளர்களுக்கும் எஸ்.எம்.எஸ்-ல் தெரிவிக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.