Pages

Thursday, December 3, 2015

மாற்று குறையாத தங்கங்கள்: இன்று உலக மாற்றுத்திறனாளிகள் தினம்

உடலளவில் பலவீனமாக இருந்தாலும், மனதளவில் மாற்றுத்திறனாளிகள் தைரியமாக உள்ளனர். இவர்களுக்குள் பல்வேறு திறமைகள் மறைந்து கிடக்கின்றன. மாற்றுத்திறனாளிகளுக்கு தேவையான வசதிகளை செய்து தர வலியுறுத்தியும், அவர்களுக்கான உரிமைகளை வழங்க வலியுறுத்தியும் ஐ.நா., சார்பில் 1992ல் இருந்து டிச., 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது.

எத்தனை பேர்உலக மக்கள்தொகையில் 10 சதவீதம் பேர் மாற்றுத்திறனாளிகளாக உள்ளனர். இதில் 80 சதவீதம் பேர் ஏழை நாடுகளில் உள்ளனர். இவர்கள் வேலைவாய்ப்பு அற்றவர்களாக உள்ளனர். வளரும் நாடுகளில் உள்ள 90 சதவீத மாற்றுத்திறனாளி குழந்தைகள் பள்ளிக்கு செல்வதில்லை என 'யுனெஸ்கோ' அமைப்பு தெரிவித்துள்ளது.வசதிகள் தேவைமேலை நாடுகளில் ஒரு நுரையீரல், ஒரு சிறுநீரகத்துடன் வாழ்பவர்களை கூட மாற்றுத்திறனாளிகளாக கருதுகின்றனர். அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் அளிக்கின்றன. ஆனால் 
இந்தியாவில் அவ்வாறான நிலையில்லை. வெளியில் தெரியும் படியான பாதிப்பை தான் அரசே ஏற்றுக்கொள்கிறது. அப்படியும் அவர்களுக்கு சிறப்பு சலுகைகள் குறைவு. பஸ், தியேட்டர் போன்ற இடங்களில் சக்கர நாற்காலியுடன் ஏறுவதற்கு வசதி தேவை. இங்கு மாற்றுதிறனாளிகளை வேலைக்கு எடுக்கவும் சில நிறுவனங்கள் தயங்குகின்றன.மாற்றுத்திறனாளிகள் பங்களிப்பை ஏற்காமல் நம்நாட்டை வளர்ந்த நாடாக மாற்றிவிடலாம் என நினைப்பது கனவாகவே முடியும் என பொருளாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.