Pages

Thursday, December 17, 2015

அனைத்து வகையான வங்கி கணக்கு தொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயம்

அனைத்து வகையான வங்கிகணக்கு தொடங்குவதற்கும்'பான்' எண்கட்டாயமாக்கப்படுகிறது என மத்தியநிதி அமைச்சர்அருண்ஜெட்லி தெரிவித்துள்ளார். இதுகுறித்து நாடாளுமன்ற துணைமானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு அவர் பதிலளித்து பேசுகையில், ''உணவு கட்டணம், வெளிநாட்டு பயண டிக்கெட் போன்றவற்றுக்கு ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கமாக செலவழித்தால் 'பான்' எண் குறிப்பிடுவது கட்டாயமாக்கப்படுகிறது.


அதேபோல், அனைத்து வகையான வங்கி கணக்கு தொடங்குவதற்கும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படுகிறது. மேலும், ரூ.2 லட்சத்திற்கும் அதிகமாக எந்த பொருளை வாங்கினாலும், விற்றாலும் 'பான்' எண் கட்டாயமாக்கப்படும். இதற்கான அறிவிக்கையை மத்திய அரசுவிரைவில் வெளியிடும். உள்நாட்டில் கருப்பு பணம் புழங்குவதை கட்டுப்படுத்தஇந்த நடவடிக்கைமேற்கொள்ளப்படுகிறது'' என்றார்.

இதனிடையே, ஜன் தன்திட்டத்தின் கீழ் துவங்கும் வங்கிக் கணக்குகளுக்குமட்டும் பான்எண் கட்டாயமில்லைஎன வருவாய்த்துறைசெயலாளர் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.