Pages

Friday, December 4, 2015

மத்திய அரசில் 7.47 லட்சம் பணியிடம் காலி: நிதித்துறையில் 46 சதவீத பணியாளர் இல்லை

ராமநாதபுரம்,:மத்திய அரசுத்துறைகளில் 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன. நிதித்துறையில் மட்டும் 46 சதவீத பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன.மத்திய அரசில் 56 துறைகள், யூனியன் பிரதேசங்களின் அரசு துறைகள் மற்றும் டில்லி போலீஸ் துறைகளில் 40.48 லட்சம் பணியிடங்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளன. இதில் சென்ற ஆண்டு வரை 33.01 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. 7.47 லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

அறிவியல் தொழில்நுட்பத் துறையில் 12,503 பணியிடங்களில் 5,823 காலியாக உள்ளன. இத்துறையில் அதிகபட்சமாக 47 சதவீதம் காலியாக இருக்கின்றன.
நிதித்துறையில் 1,76,260 பணியிடங்களில் 95,863 காலியாக உள்ளன. இது 46 சதவீதம். விமான போக்குவரத்துறையில் 44 சதவீதம், சிறுபான்மைத்துறை 41, பாதுகாப்புத்துறையில் 32, உணவு வழங்கல்துறை 31, வனத்துறை 37, வெளியுறவுத்துறை 34, கனரக தொழிற்சாலை 34, மனிதவள மேம்பாட்டுத்துறை 35 சதவீதம் என, அனைத்து துறைகளிலும் சராசரியாக 18 சதவீத பணியிடங்கள் காலியாக உள்ளன. இந்த விபரம் 7வது ஊதியக்குழு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியிடங்களை நிரப்ப, மத்திய அரசு ஊழியர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.