கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற குரூப்-1 முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு (டி.என்.பி.எஸ்.சி) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.
இது தொடர்பாக மதுரையைச் சேர்ந்த பி.கார்த்திக் ராஜா என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு விவரம்: குரூப்-1 பதவிகளுக்கு காலியாக உள்ள 74 பணியிடங்களுக்கான முதல் நிலைத் தேர்வை, டி.என்.பி.எஸ்.சி நடத்தியது.
நவீன இயந்திரங்களைக் கொண்டு லட்சக்கணக்கான வினாத்தாள்களை விரைவாக திருத்தம் செய்து, ஒரு மாதத்தில் முடிவுகளை வெளியிட முடியும். ஆனால், தேர்வு முடிவு தள்ளிப் போவதால், 30 வயதைக் கடந்தவர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர்.
எனவே, கடந்த நவம்பரில் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை ஒரு மாதத்துக்குள் வெளியிடுமாறு டி.என்.பி.எஸ்.சி}க்கு என கோரியிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், கடந்த நவம்பர் மாதம் நடைபெற்ற முதல் நிலைத் தேர்வு முடிவை 4 மாதங்களுக்குள் வெளியிட வேண்டும் என தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு உத்தரவிட்டார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.