Pages

Saturday, December 19, 2015

4 மாவட்டங்களுக்கு தேர்வு அட்டவணை: அண்ணா பல்கலை. வெளியீடு

வெள்ள பாதிப்புக்குள்ளான சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலூர் ஆகிய 4 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கான தேர்வுகள் டிசம்பர் 29 முதல் தொடங்க உள்ளன. தொடர் மழை- வெள்ள பாதிப்புகள் காரணமாக, பருவத் தேர்வுகளை அண்ணா பல்கலைக்கழகமும் ஒத்திவைத்தது. மழை ஓய்ந்தவுடன் பருவத் தேர்வுகளுக்கான மறு தேதிகளை அறிவித்தது. அதில் இணைப்புக் கல்லூரிகளுக்கான முதலாமாண்டு (2013 நடைமுறை) முதல் பருவத் தேர்வுகளை இடைவெளிகள் எதுவுமின்றி டிசம்பர் 15 முதல் 21 வரை 6 பாடங்களுக்கான தேர்வுகள் அறிவிக்கப்பட்டன.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து மாணவர்கள் போராட்டம் நடத்தினர். இதையடுத்து, டிசம்பர் 16, 18 ஆகிய இரு நாள் தேர்வுகளை பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. இதை ஏற்காமல் மாணவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்தனர்.


பின்னர், விருப்பப்பட்டால் தேர்வு எழுதலாம் அல்லது இரண்டாம் பருவத் தேர்வுக்குப் பிறகு ஏப்ரல்-மே மாதத்தில் எழுதலாம். இவர்கள் "அரியர்' எழுதுபவர்களாக கருதப்பட மாட்டார்கள் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்தது.

இந்த நிலையில், அப்துல் கலாம் விஷன் இந்தியா அறக்கட்டளை சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கில் நீதிமன்றம் பிறப்பித்த ஒர் உத்தரவைப் பிறப்பித்தது. இதன்படி, 4 மாவட்டகளில் உள்ள 148 பொறியியல் கல்லூரிகளுக்கு அனைத்து பருவத் தேர்வுகளையும் அண்ணா பல்கலைக்கழகம் ஒத்திவைத்தது. பிற மாவட்டங்களில் உள்ள கல்லூரிகளுக்கு முன்னர் அறிவித்தபடி டிசம்பர் 15 முதல் தேர்வுகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், 4 மாவட்டங்களில் உள்ள பொறியியல் கல்லூரிகளுக்கு புதிய தேர்வு கால அட்டவணை www.annauniv.edu என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, டிசம்பர் 29 முதல் தேர்வுகள் தொடங்க உள்ளன. 

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.