Pages

Tuesday, December 1, 2015

தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணி: கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் நடக்கிறது; டி.என்.பி.எஸ்.சி. அறிவிப்பு

தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான கலந்தாய்வு டிசம்பர் 4 முதல் 12-ஆம் தேதி வரையும், 14-ஆம் தேதியும் நடைபெறுகிறது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:


தட்டச்சர்-சுருக்கெழுத்து தட்டச்சர் பணிகளை நேரடி நியமனம் செய்யும் வகையில், எழுத்துத் தேர்வு 2014-ஆம் ஆண்டு டிசம்பர் 21-இல் நடைபெற்றது. இதில், தேர்வானோருக்கு சென்னையில் உள்ள டி.என்.பி.எஸ்.சி. அலுவலகத்தில் டிசம்பர் 4 முதல் வரும் 12-ஆம் தேதி வரை கலந்தாய்வு நடைபெறும். சுருக்கெழுத்து தட்டச்சர் பணிக்கு மட்டும் 14-இல் கலந்தாய்வு நடக்கும். 

 விண்ணப்பதாரர்களின் தரவரிசை அடங்கிய தாற்காலிகப் பட்டியல் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு செல்லிடப்பேசியில் குறுஞ்செய்தியும் (எஸ்.எம்.எஸ்.,), மின்னஞ்சலில் அட்டவணையும் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. கலந்தாய்வுக்கு வரத் தவறுவோருக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.