Pages

Friday, December 18, 2015

ஜனவரி 11-ல் அரையாண்டு தேர்வு: தமிழக பள்ளிக் கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளி மாணவர்களுக்கான அரையாண்டுத் தேர்வு வரும் ஜனவரி மாதம் 11-ம் தேதி துவங்கும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. தமிழகத்தில் ஏற்பட்ட மழை, வெள்ள பாதிப்புகள் காரணமாக அரையாண்டுத் தேர்வுகள் தள்ளி வைக்கப்பட்டிருந்தன. ஜனவரி 11-ம் தேதி துவங்கும் தேர்வு அந்த மாதம் 27-ம் தேதி வரை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 


இந்த அறிவிப்பை மீறி ஜனவரி 11-ம் தேதிக்கு முன்னரே அரையாண்டு தேர்வை நடத்தினால், தேர்வு நடத்தும் பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.