Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Monday, November 2, 2015

    டாட்டா சங்கத்தின் உச்ச நீதிமன்றம் வழக்கு .SLP(C)NO.9109 / 2015ல் I.A.NO.6/2015.

    20 துறைகள் சார்ந்த 52 வகை பணியிடங்களுக்கு அரசு ஆணை எண்.71.நிதி .நாள் .26.2.11 மூலம் ஊதிய குறைப்பு செய்து ஆணையிட பட்டது .அதே அரசு ஆணையில் ஊதிய குறைதீர்ப்பு பிரிவு அமைக்கப்பட்டது .இந்த பிரிவில் ஊதிய பாதிப்பு மற்றும் முரண்பாடு உள்ளவர்கள் மனு செய்து பாதிப்பை சரி செய்து கொள்ளலாம் .என ஆணையிடப்பட்டது .ஊதிய குறைப்பால் பாதிக்கப்பட்ட தனிநபர்கள் மற்றும் பல சங்கம் நீதிமன்றம் நாடி தடைகள் பெற்றனர் .இதன் தொடர்ச்சியாக நடந்த வழக்கு விசாரணை W.A.No.504/2012ன் முடிவில் 27.2.2014.அன்றுசென்னை உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தமிழக அரசின் ஒருநபர் குழு அறிக்கை மற்றும் ஊதியகுறை தீர்க்கும் பிரிவு அறிக்கைகள் ரத்து செய்தது மட்டும் அல்லாமல் ஓய்வு பெற்ற தலைமை நீதியரசர் திரு .வெங்கடாசலம் மூர்த்தி அவர்கள் தலைமையில் ஆணையம் அமைத்து தீர்ப்பு வழங்கப்பட்டது.

    இந்த ஆணையம் தமிழக அரசு ஊழியர்களுக்கு ஆறாவது ஊதிய குழுவில் ஏற்பட்ட ஊதிய முரண்பாடு குறித்து ஆய்வுகள் செய்து அரசுக்கு அறிக்கைகள் கொடுக்க வேண்டும். மேலும் 20 துறைகள் சார்ந்த 52. வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்து சரியா? தவறா? என ஆய்வுகள் செய்து அறிக்கை கொடுத்து அதன்படியே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் .இந்த பணியிடங்களுக்கு ஒருநபர் குழு அறிக்கை படி மத்திய அரசு ஊழியர்களை விட அதிக ஊதியம் நாளது தேதி வரை வழங்கப்படுகிறது.
    தற்போது தமிழக அரசூழியர்கள் ஊதிய பிரச்சினை வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த வழக்கில் அரசு வெற்றி பெற வேண்டும் என்றால் இடைநிலை ஆசிரியர்களுக்கு பொய்யான காரணம் கூறி 1989 முதல் பெற்று வந்த ஊதியத்தை மீண்டும் வழங்கிட வேண்டும் என்ற இக்கட்டான நிலை அரசுக்கு ஏற்பட்டுள்ளது. டாட்டா சங்கத்தின் சட்ட போராட்டத்திற்குள் போராட்டம் வலு சேர்ந்துள்ளது. நமது சங்கம் ஆறாம் ஊதிய குழு அறிக்கைகள் சட்ட விரோதமானவை உண்மையில்லாதவை என பல்வேறு ஆதாரம் தாக்கல் செய்து உள்ளது. இதனால் நமது ஊதிய பிரச்சினையை தீர்த்தால் தான் 52 வகையான பணியிடங்களுக்கு ஊதிய குறைப்பு செய்தது சரி என அரசு வழக்கில் வெற்றி பெற முடியும் என்ற நிலையை டாட்டா சங்கத்தின் உச்சநீதிமன்ற ஊதிய வழக்கு ஏற்படுத்தி உள்ளன. இதன் காரணமாக தான் அரசு இடைநிலை ஆசிரியர் ஊதியம் 9300+4200 என மாற்றம் செய்திட நடவடிக்கை எடுத்து வருகிறது.
    இந்த அபிட்விட்டை பிரிண்டு எடுத்து வருகிற குறுவள மைய பயிற்சியில் 7.11.15 அன்று அனைவரிடமும் கொண்டு சேர்க்க வேண்டுகிறேன்.
    அரசாணை எண்.71 நாள்.26.2.2011 மற்றும் அரசாணை எண்.242 நாள்.22.7.2013ன் படி ஊதிய குறைப்பு செய்யப்பட்ட 20 துறைகள்
    வேளாண்மை துறை
    வேளாண்மை பொறியியல் துறை 
    கால்நடை பராமரிப்புத் துறை
    மீன் வளத்துறை
    நெடுஞ்சாலைத் துறை
    ஊரக வளர்ச்சித் துறை
    போக்குவரத்துத் துறை
    கைத்தறித் துறை
    அரசு வாகனங்கள் பராமரிப்புத் துறை
    பொதுப்பணித் துறை .
    இன்டஸ்ட்ரீஸ் துறை 
    அரசு இல்லங்கள் துறை .
    மருத்துவ போக்குவரத்து துறை .
    உடல் உனமுற்றோர் நலத் துறை .
    நகர பஞ்சாயத்துத் துறை .
    மின்சார வாரியம்
    சென்னை மாநகராட்சி .
    வருவாய் துறை .
    காவல் துறை .
    வனத்துறை.
    டாட்டா கிப்சன் .
    பொது செயலாளர் .
    தமிழ்நாடு அனைத்து ஆசிரியர் சங்கம் .
    9443464081.

    2 comments:

    Simbutata gudalur said...

    அனைவரும் T.A.T.A வில் இனைவோம்.

    இவன்
    சிலம்பரசன் இ.நி.ஆ.கூடலூர்

    Simbutata gudalur said...

    அனைவரும் T.A.T.A வில் இனைவோம்.

    இவன்
    சிலம்பரசன் இ.நி.ஆ.கூடலூர்