Pages

Thursday, November 5, 2015

வேலைவாய்ப்பு பதிவு மூப்பு: கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியீடு

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் பதிவு மூப்பு அடிப்படையில் தேர்வு செய்யப்படும் பணியிடங்களுக்கான கட்-ஆஃப் தேதி விவரங்கள் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.


மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களின் மூலம் அவ்வப்போது நிரப்பப்படும் பணியிடங்களுக்கான பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் www.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

எட்டாம் வகுப்பு முதல் பட்ட மேற்படிப்பு வரை படித்துவிட்டு மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்யலாம். அவர்கள் வேலைவாய்ப்புக்குப் பதிவு செய்த தேதியின் அடிப்படையில் பதிவு மூப்பு வழங்கப்படும்.
 இதில் 2015 ஆகஸ்ட் மாத நிலவரப்படி, நடத்துநர், தட்டச்சர், வாட்ச்மேன், உதவியாளர் உள்ளிட்டப் பணியிடங்கள் வாரியாக பதிவு மூப்பு கட்-ஆஃப் தேதி விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன. தமிழகம் முழுவதும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெறாதவர்கள் 4.94 லட்சம் பேரும், பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்ற 60 லட்சம் பேரும் வேலைவாய்ப்புக்காக பதிவு செய்துள்ளனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.