Pages

Thursday, November 5, 2015

தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஓவர்?

வரும், 2016 - 17ம் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கையை, பொது உத்தரவு துறை வெளியிடுவதற்கு முன்பே, பல தனியார் கல்வி நிறுவனங்கள் முடித்து விட்டதாக அறிவித்துள்ளன.


இது, பெரும்பாலான பெற்றோருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. வழக்கமாக, கல்வி நிறுவனங்களில் கல்வி உரிமை சட்டத்தின் ஆர்.டி.ஐ., கீழ் ஒதுக்கப்படும் இடங்கள் நிர்ணயிக்கப்பட்டவுடன், அடுத்த கல்வியாண்டுக்கான மாணவர் சேர்க்கை குறித்த உத்தரவை, பொது உத்தரவு துறை  டி.பி.ஐ., டிசம்பர் அல்லது ஜனவரியில் வெளியிடும். அதன் பின்னரே மாணவர் சேர்க்கை துவக்கப்படும்.

ஆனால், பல கல்வி நிலையங்களில், டி.பி.ஐ., உத்தரவு வருவதற்கு முன்னரே, வரும் கல்வி ஆண்டிற்கான மாணவர் சேர்க்கை முடிவடைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டிருப்பது, பெற்றோரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

மாணவர் சேர்க்கைக்காக, இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கோரி, பல கல்வி நிறுவனங்கள் அறிவிப்பு வெளியிட்டிருந்தன. ஒரே ஒரு நாள் மட்டுமே அந்த அறிவிப்பு காணப்பட்டது. இதை பார்த்தவர்கள், தங்கள் குழந்தைகளுக்கான விண்ணப்பங்களை கொடுத்து, தங்கள் குழந்தைகளை சேர்த்து விட்டனர். இதனால், பல பெற்றோர் அதிர்ச்சியடைந்து உள்ளனர். பல கல்வி நிலையங்களில் பொதுவான கால அட்டவணையோ, தொடர்பு முறைகளோ இல்லாததால், மாணவர் சேர்க்கை குறித்து முறையாக அறிவிப்பதில்லை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.

இதுமட்டுமின்றி அடுத்த கல்வியாண்டிற்கான கட்டணமும், 15 முதல், 30 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளதாக தெரிகிறது. டிசம்பர், ஜனவரியில் மாணவர் சேர்க்கை நடத்த அனுமதி கேட்ட கல்வி நிறுவனங்களிடம், ஆர்.டி.ஐ., இடஒதுக்கீடு மார்ச்சில் வெளியான பின்னரே, மாணவர் சேர்க்கையை துவக்க வேண்டும் என்று பொது உத்தரவு துறை அறிவுறுத்தியிருந்தது.

ஆனால், அந்த கால கட்டத்தில், ஆண்டுத் தேர்வுகள் நடக்கும் என்பதால், பல கல்வி நிலையங்கள், அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையை முன் கூட்டியே முடித்துவிட்டன. பள்ளிகளில், சிசிடிவி கேமரா அமைப்பது உட்பட பல முக்கிய அடிப்படை தேவைகளை நிறைவேற்றவுள்ளோம். அந்த நேரத்தில் பெற்றோரிடம் நிதி கேட்பது முறையல்ல என்பதால், கல்வி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.