Pages

Wednesday, November 18, 2015

புதிய தலைமை தேர்தல் அதிகாரி விரைவில் அறிவிப்பு வெளியீடு


தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேஷ் லக்கானி நியமிக்கப்பட உள்ளார். ஓரிரு நாளில், இதற்கான அறிவிப்பு வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது. தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக, 2014 அக்., 30ல், சந்தீப் சக்சேனா பொறுப்பேற்றார். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தல், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், அவரது மேற்பார்வையில் நடந்தது.


ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில், கள்ள ஓட்டுகள் அதிகம் பதிவானதாக புகார் எழுந்தது. ஆளும்கட்சிக்கு சாதகமாக அவர் செயல் படுவதாக, எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டினர்.எனினும், அவர், நவீன தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, வாக்காளர் பட்டியலில் உள்ள குளறுபடிகளை நீக்க, தவறு இல்லாத வாக்காளர் பட்டியல் தயார் செய்யும் பணியில் ஈடுபட்டார். இதன் மூலம், தேர்தல் கமிஷனர்களின் பாராட்டை பெற்றார். தேர்தல் கமிஷனில், மூன்று துணை தேர்தல் கமிஷனர் பதவிகள் காலியாக இருந்தன.

எனவே, சந்தீப் சக்சேனாவை துணை கமிஷனராக நியமிக்க, தேர்தல் கமிஷன் முடிவு செய்தது. இதற்கான அறிவிப்பு, கடந்த மாதம் வெளியானது. அதைத் தொடர்ந்து, புதிய தலைமை தேர்தல் அதிகாரியை தேர்வு செய்ய, மூன்று பேரின் பெயர்களை, தமிழக அரசு, தேர்தல் கமிஷனுக்கு பரிந்துரை செய்தது. மூன்று பேரில் ஒருவரை தேர்வு செய்வதற்கான, ஆலோசனைக் கூட்டம், டில்லியில் நேற்று நடந்தது. தற்போது, தமிழக எரிசக்தித் துறை முதன்மை செயலராக உள்ள ராஜேஷ் லக்கானி தேர்வு செய்யப்பட்டதாக, தகவல் வெளியாகி உள்ளது. இது குறித்து, தேர்தல் பிரிவு அதிகாரிகள் கூறும்போது,

'தேர்தல் கமிஷன் தேர்வு செய்துள்ள அதிகாரியின் பெயரை, தமிழக அரசுக்கு அனுப்பும். தமிழக அரசு, அரசாணை பிறப்பித்து, அவரை விடுவிக்கும். இப்பணி, ஓரிரு நாளில் நடைபெறும்' என்றனர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.