Pages

Monday, November 23, 2015

ஆசிரியர்களுக்கு பேரிடர் பயிற்சி

சென்னை:மாவட்ட வாரியாக, ஆசிரியர்களுக்கு பேரிடர் மேலாண்மைப் பயிற்சி அளிக்க உத்தரவிடப்பட்டுள்ளது; சென்னையில், இன்று பயிற்சி துவங்குகிறது.


தமிழக கடலோர மாவட்டங்கள், மழை, வெள்ளத்தால் கடும் பாதிப்புகளை சந்தித்துள்ளன.இதுபோன்ற பேரிடர் காலங்களில், மாணவர்களையும், தங்களையும் எப்படி தற்காத்து கொள்வது என்பது குறித்து, ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க, ஆசிரியர் கல்வியியல் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் உத்தரவிட்டு உள்ளது.


இதன்படி, சென்னையில், லேடி வெலிங்டன் ஆசிரியர் கல்வியியல் கல்லுாரி வளாகத்தில் உள்ள, மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவனத்தில், இன்று பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி துவங்குகிறது;28 வரை நடக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.