Pages

Thursday, November 19, 2015

தமிழக அமைச்சரவை விரைவில் மாற்றம்? இரு எம்.எல்.ஏ.,க்களுக்கு முதல்வர் அழைப்பு

ஸ்ரீரங்கம் மற்றும் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ.,க்களை சந்திக்க, முதல்வர் ஜெயலலிதா அழைப்பு விடுத்திருந்ததால், விரைவில் தமிழக அமைச்சரவையில் மாற்றம் வரும் என, தகவல் வெளியாகி உள்ளது. மேலும், சொத்து குவிப்பு வழக்கில், தனக்காக ஆஜரான வழக்கறிஞர்கள் ஆறு பேருக்கு, காலியாக உள்ள, அரசு பணியாளர் தேர்வாணைய குழு உறுப்பினர் பதவி வழங்கவும், முதல்வர் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.


அமைச்சர்கள் பன்னீர்செல்வம், வைத்திலிங்கம், மோகன், காமராஜ், ஆகியோர் கூடுதல் துறைகளை கவனித்து வருகின்றனர். அந்த துறைக்கு புதிய அமைச்சர்களை நியமிக்கவும், சர்ச்சைக்குள்ளான அமைச்சர்களை மாற்றவும், முதல்வர் திட்டமிட்டு உள்ளதால், அமைச்சரவையில் விரைவில் மாற்றம் வரும் என்று கூறப்படுகிறது.குறிப்பிட்ட இனத்தவரை விமர்சித்த பிரச்னையில் சிக்கிய, சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர், வேலுார் கூட்டத்தில், சொத்துகள் குறித்து பேசிய பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் வீரமணி ஆகியோரின் பதவி பறிக்கப்படலாம் என்றும் தகவல் வெளியானது.இந்நிலையில், ஸ்ரீரங்கம் தொகுதி இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வளர்மதி, ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி எம்.எல்.ஏ., கிட்டுசாமி ஆகியோருக்கு, முதல்வரை சந்திக்க, அழைப்பு சென்றதை தொடர்ந்து, அவர்களுக்கு அமைச்சரவையில் இடம் கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

சொத்து குவிப்பு வழக்கில், முதல்வர் தரப்பு வழக்கறிஞர்களாக, தமிழகத்தைச் சேர்ந்த, 20க்கும் மேற்பட்டோர் பணியாற்றினர்.அவர்களில், முக்கிய பணிகளில் ஈடுபட்ட ஆறு பேருக்கு, முதற்கட்டமாக, தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் காலியாக உள்ள உறுப்பினர் பதவியை வழங்க, முதல்வர் ஜெயலலிதா திட்டமிட்டு உள்ளதாக கூறப்படுகிறது.நேற்று, முதல்வர் ஜெயலலிதாவை சந்திக்க அழைக்கப்பட்டு இருந்தவர்களில், ராசிபுரம் முன்னாள் எம்.பி., சரோஜாவும், முன்னாள் எம்.எல்.ஏ., ராசு ஆகியோரும் அடங்குவர்.

-- நமது சிறப்பு நிருபர் --

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.