Pages

Tuesday, November 17, 2015

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம்

இந்திய மாணவர்களுக்கு புதிய விசாக்களை பிரிட்டன் அரசு விரைவில் அறிமுகம் செய்ய இருப்பதாகத் தகவல்

தெரிவிக்கின்றன. இதன்மூலம் பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் படிப்பை முடிக்கும் மாணவர்கள் அதைத் தொடர்ந்து 2 ஆண்டுகள் பிரிட்டனில் வேலை பார்க்கும் வசதி செய்யப்படும்.


பிரிட்டனில் படிக்கத் திட்டமிட்டுள்ள மாணவர்களுக்கு இந்தச் செய்தி வரப்பிரசாதமாக அமைந்துள்ளது. இந்த புதிய விசார திட்டத்தை லண்டன் மாநகர மேயர் போரிஸ் ஜான்ஸன், பிரிட்டன் அரசிடம் தரவுள்ளார். இந்தத் திட்டம் நிறைவேறினால் காமன்வெல்த் ஒர்க் விசா இந்திய மாணவர்களுக்குக் கிடைக்கும்.

இந்த புதிய விசாத் திட்டம் இந்திய மாணவர்களுக்கு மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளது. பிரிட்டன் பல்கலைக்கழகத்தில் பட்டம் படித்து முடித்த மாணவர்கள் அதன் பிறகு 2 ஆண்டுகள் அங்கேயே வேலை செய்து பணம் ஈட்ட முடியும். இதுகுறித்து போரிஸ் ஜான்ஸன் கூறியதாவது: இந்திய மாணவர்களுக்கு புதிய விசா திட்டம் உள்பட பல்வேறு திட்டங்களை அரசிடம் சமர்ப்பிக்கவுள்ளோம்.

இரண்டாவதாக அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல், கணிதம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கும் நிபுணர்களுக்கு சிறப்பு விசா திட்டத்தையும் அரசிடம் தரவுள்ளோம். பிரிட்டனில் 3-வது பெரிய வருவாய் உற்பத்தியாளர்களாக இந்திய மாணவர்கள் உள்ளனர் என்றார் அவர்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.