Pages

Monday, November 2, 2015

மறியல் போராட்டம் ஆசிரியர்கள் திட்டம்

ஒரு நாள் வேலைநிறுத்த போராட்டத்தை தொடர்ந்து, தொடர் மறியல் போராட்டத்துக்கு ஆசிரியர்களின் ஒருங்கிணைந்த கூட்டுக்குழு (ஜாக்டோ ) திட்டமிட்டுள்ளது.


மத்திய அரசுக்கு இணையான ஊதியம், தமிழ் வழி கல்வி மேம்பாடு உள்ளிட்ட, 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஜாக்டோ அமைப்பு சார்பில், பல்வேறு கட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. மாநில அளவில் அனைத்து மாவட்டங்களிலும் தொடர் மறியல் போராட்டத்தை மேற்கொள்ள உயர்மட்டக்குழு திட்டமிட்டுள்ளது. முதல் ஆயத்த மாநாடு, டிச., 12, 13 ஆகிய தேதிகளில் அனைத்து வட்டாரங்களிலும் நடக்கிறது.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு, டிச., 28, 29, 30 ஆகிய மூன்று நாட்கள் தொடர் மறியல் செய்ய உள்ளனர். மாவட்டத்தில், இப்போராட்டத்தில், 7,000 ஆசிரியர்கள் பங்கேற்கவுள்ளதாக, ஜாக்டோ நிர்வாகிகள் தெரிவித்தனர்.

6 comments:

  1. இன்று வரை நீங்கள் வாங்கி தருவீர்கள் என்று நினைத்து உங்கள் பின்னாடியே வந்துகொன்டிருக்கிறோமே எங்களை விட முட்டால் யாரும் இல்லை மனசாட்சி உங்களுக்கு இல்லையா? 9ஆண்டுகள் நம்மை ஏமாற்றி இதுவரை வாங்கிதரவில்லை இனிமேலும் வாங்கிதர கூடாது என்ற காரனத்தில் தான் இப்படியான போராட்டம் நீங்கள் எங்களால் சபிக்கப்படுவீர்கள் இங்களிடம் பெற்ற சந்தா பணத்தையாவது திருப்பி கொடுங்கள் நீங்கள் நடித்த நாடகம் போதும் இனிமேலும் ஏமாறமாட்டோம்.
    இவன்
    சிலம்பரசன்.இ.நி.ஆ

    ReplyDelete
  2. 7000 பேர் மட்டுமா?????

    ReplyDelete
  3. இடைநிலை ஆசிரியர்கள் வாங்கும் PP 750 அரசு தரவிலலை.

    ச்ங்கங்கள் போராட்டமே பெற்று தந்தது

    நம்புவோம்

    ReplyDelete
  4. 750 மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  5. 750 மட்டும் போதும் என்று நினைக்கிறீர்களா?

    ReplyDelete
  6. 750 எப்படி வந்த்து?......

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.