Pages

Wednesday, November 4, 2015

சிறப்பு ஆசிரிய பயிற்றுநர்களுக்கு இடமாற்ற ஆன்லைன் கலந்தாய்வு

விழுப்புரம் மாவட்ட அரசு பள்ளிகளில் பணிபுரியும் சிறப்பு பகுதிநேர ஆசிரிய பயிற்றுநர்கள் பணி இடமாற்றம் செய்வதற்கான கவுன்சிலிங் நடந்தது. தமிழகத்தில் 100 மாணவர்களுக்கு மேலுள்ள அரசு பள்ளிகளில், இந்த எண்ணிக்கைக்கு குறைவாக உள்ள பள்ளிகளில் அதிகபட்சமாக பணிபுரியும் பகுதிநேர பயிற்றுநர்களை அங்கு பணியிட மாற்றம் செய்ய வேண்டுமென பள்ளி கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.


இதையொட்டி, விழுப்புரம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகத்தில் சிறப்பு ஓவிய ஆசிரிய பயிற்றுநர்களை பணி இடமாற்றம் செய்வதற்கான கவுன்சிலிங் நடந்தது. மாவட்டத்தில் மொத்தமுள்ள 1,649 ஆசிரிய பயிற்றுநர்களில், 100க்கும் குறைவான பள்ளிகளில் பணிபுரியும் 91 ஓவிய ஆசிரியர்கள் பங்கேற்றனர்.

இவர்களுக்கு பணிமூப்பு, உடல் ஊனம், கண் பார்வை இழப்பு, முன்னாள் ராணுவ வீரரின் மனைவி, விதவை, மாற்று திறனாளி ஆகிய முன்னுரிமைகள் அடிப்படையில் அதிக மாணவர்கள் உள்ள அரசு பள்ளிகளுக்கு பணி இடமாற்றம் செய்யப்பட்டது.

இதற்கான ஆணையை சி.இ.ஓ., மார்ஸ் வழங்கினார். இதனை தொடர்ந்து இன்று உடற்கல்வி ஆசிரியர்களுக்கும், நாளை தொழிற்கல்வி ஆசிரிய பயிற்றுனர்களுக்கு கலந்தாய்வு நடக்கிறது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.