Pages

Friday, November 20, 2015

வேலூர் மாவட்டத்தில் நடைபெறுவதாக இருந்த கணித திறனறித் தேர்வு தள்ளிவைப்பு

தொடர் மழை காரணமாக பள்ளி மாணவர்களுக்கான கணிதத் திறனறித் தேர்வு வருகிற நவம்பர் 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. இதுகுறித்து மாவட்ட அறிவியல் அலுவலர் ஜெ.ஆர்.பழனிசுவாமி வெளியிட்ட அறிக்கை:


கணித மேதை சீனிவாச ராமானுஜம் பிறந்த தினத்தை முன்னிட்டு மாவட்ட அறிவியல் மையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கணித திறனறித் தேர்வு வருகிற ஞாயிற்றுக்கிழமை (நவ.22) நடைபெறுமென அறிவிக்கப்பட்டிருந்தது.


தொடர் மழை காரணமாக இந்தத் தேர்வு நவ. 29-ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்படுவதுடன், தேர்வுக்கான பதிவுகள் நவ. 26ஆம் தேதி வரை நடைபெறும் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.