பருப்பு வகைகளின் விலை உயர்வால், பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் மதிய உணவு திட்டத்துக்கு மாநில அரசு, கூடுதலாக, 50 கோடி ரூபாயை வழங்கியுள்ளது.
துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட பருப்பு வகைகளின் விலை உயர்ந்ததால், மதிய உணவு திட்டத்துக்கான செலவு அதிகரித்து, பள்ளிகளில் மாணவர்களுக்கு மதிய உணவு வழங்குவதில் சிக்கல் ஏற்பட்டது. பள்ளிகளில் மதிய உணவில் பருப்பு பயன்படுத்துவது குறைந்தது. இதுகுறித்து எச்சரிக்கை அடைந்த அரசு, மதிய உணவு திட்டத்துக்கு, கூடுதலாக, 50 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
No comments:
Post a Comment