பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு தொடர்பாக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி எழுதி வாங்க உத்தரவிடப்பட்டு உள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 மாணவர்களுக்கு, மார்ச் முதல் வாரத்தில் பொதுத்தேர்வு நடக்க உள்ளது. இதற்காக, மாணவர்களிடம், புதிதாக உறுதிமொழி படிவத்தில் கையெழுத்து வாங்கி, தேர்வுத் துறைக்கு அனுப்ப உத்தரவிடப்பட்டு உள்ளது.
அதன்படி, ஒவ்வொரு மாணவரும், 'பள்ளி பாடப் புத்தகத்தின் பின்பக்க கேள்விகள் மற்றும் வினா வங்கி புத்தங்களை மட்டும் படித்தால், 'சென்டம்' மதிப்பெண் வாங்க முடியாது என, எங்களுக்கு தெரியும்' என, எழுதி கையெழுத்திட்டு தர வேண்டும். இதுகுறித்து, அதிகாரிகள் கூறியதாவது:கடந்த கல்வி ஆண்டில், பிளஸ் 2 பொருளியல் மற்றும் வணிகவியல் தேர்வுகளில், புத்தகத்தில் இல்லாத கேள்விகள், வினாத்தாளில் இடம் பெற்றதாக கூறி, அதற்கு மதிப்பெண் வழங்க கோரி, நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
மேலும், மாணவர்கள் புத்தகத்தின் கேள்விகள் மற்றும் நுால் வழிகாட்டி புத்தகங்கள் மற்றும் வினா வங்கிகளையே, அதிகம் படிக்கின்றனர். பாடத்திட்டப்படி வழங்கப்படும் புத்தகத்தில், பல பகுதிகளை படிப்பதில்லை. எனவே, இந்த ஆண்டு வழக்கு பிரச்னைகளை தடுக்கவும், மாணவர்களை பாடப் புத்தகங்களை முழுமையாக படிக்க வைக்கவும், இந்த உறுதிமொழி எழுதி வாங்கப்படுகிறது. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.