தமிழ்நாடு சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கு, 29ம் தேதி, எழுத்துத்தேர்வு நடக்கிறது.தமிழக போலீசில், போலீசாருக்கு உறுதுணையாக செயல்பட, 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட, சிறப்பு காவல் இளைஞர் படையினர் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள், தங்களை போலீசாராக அறிவிக்க வேண்டும் என, அரசுக்கு கோரிக்கை விடுத்ததை அடுத்து, சில மாதத்திற்கு முன், அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும், 29ம் தேதி, சிறப்பு காவல் இளைஞர் படையினருக்கான எழுத்துத்தேர்வை, தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியம் நடத்துகிறது. அதற்கான நுழைவுச்சீட்டு, இளைஞர் படையினருக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது.
தேர்வில் வெற்றி பெறுபவர்கள், தமிழக போலீசாராக மாற்றப்படுவர் என, போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.