Hot News

JUST A MOMENT PLS! தமிழகத்தின் முன்னணி இலவச குறுந்தகவல்(SMS) சேவையில் பங்கு பெற கீழே உள்ள முறைப்படி பதிவு செய்யுங்கள்!!
  • கல்வித்துறை சார்ந்த இலவச SMS களை உடனுக்குடன் பெற ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு அனுப்பி இலவச குறுந்தகவல்களை SMS வழியாக பெறுங்கள். type செய்யும்போது ON (one space)ஒரு இடம் விட்டு TNKALVII (no space) இடமின்றி type செய்து அனுப்ப வேண்டும். அதாவது ON TNKALVII என்று type செய்து 9870807070 என்ற எண்ணிற்கு SMS ஐ அனுப்ப வேண்டும். DND (Do NOT Disturb) சர்வீஸ்ல் உள்ள எண்கள் அதனை(DND) நீக்கிய பிறகே இச்சேவையை பெறமுடியும். தமிழக தொடக்கக்கல்வித் துறையின் முன்னணி வலைதளத்திலிருந்து தகவல்களை இலவசமாக உடனுக்குடன் SMS வழியாக பெறுங்கள்.
  • உடனடியாக தகவல்கள் E-MAIL வாயிலாக பெற கீழே உள்ள கட்டத்தில் உங்கள் E-MAIL IDஐ பதிவு செய்து பின்பு உறுதி செய்யுங்கள்!

    Saturday, November 14, 2015

    151 பள்ளி கட்டடம் இடிக்க வேலூர் கலெக்டர் உத்தரவு

    வேலுார் மாவட்டத்தில், பயன்பாட்டில் இல்லாத, 151 பள்ளி கட்டடங்களை இடிக்க, கலெக்டர் நந்தகோபால் உத்தரவிட்டுள்ளார்.வேலுார் மாவட்டத்தில், பெரும்பாலான அரசு பள்ளிகளில் உள்ள கட்டடங்கள் இடிந்து விழும் நிலையிலும், பாழடைந்தும் காணப்படுகின்றன.
    கட்டடங்களின் மேற்கூரைகள் இடிந்து பல மாணவர்கள் காயமடைந்தனர். எனவே, பழுதடைந்த கட்டடங்களை அடையாளம் காணும் பணி நடந்தது. வேலுார் மாவட்டத்தில், 743 பஞ்சாயத்துகளில், அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பயன்பாட்டிற்கு இல்லாத, 151 பாழடைந்த பள்ளி கட்டடங்கள் கண்டுபிடிக்கப்பட்டன. பள்ளி கட்டடங்களை இடிக்க, ஊரக வளர்ச்சி துறையினர், கலெக்டருக்கு பரிந்துரை செய்தனர். பரிந்துரையை ஏற்ற கலெக்டர் நந்தகோபால், அரசின் அனுமதி பெற்று, பாழடைந்த பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவிட்டார்.

    No comments: