Pages

Wednesday, November 4, 2015

10ம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் உளவியல் ரீதியாக தயாராக வேண்டும்

'பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களை, உளவியல் ரீதியாக தயார்படுத்த வேண்டும்' என, அனைத்து பள்ளிகளையும், தேர்வுத்துறை இயக்குனர் அறிவுறுத்தியுள்ளார்.


தமிழகத்தில், சமச்சீர் கல்வி பாடத்திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும், அரசு, மெட்ரிக் மற்றும் ஆங்கிலோ இந்தியன் பள்ளி மாணவர்களுக்கு, அடுத்த ஆண்டு மார்ச்சில் பொதுத்தேர்வு நடக்கும்.சுற்றறிக்கைஇதற்கான முன் தயாரிப்பு பணிகளில், அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் ஈடுபட்டுள்ளது. பொதுத்தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்த, தற்போதே தீவிர பயிற்சி வழங்கவும், சந்தேகங்களை தீர்க்கவும், அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கும், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள் மூலம் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. 
அதன் விவரம்:புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக படித்து, புரிந்து தேர்வுக்கு தயாராவதற்கு பதில், கடந்த பருவங்களில் வெளியான வினாக்களின் தொகுப்பை 
மட்டும் படித்தால், முழு மதிப்பெண் பெறலாம் என்ற தவறான எண்ணம் மாணவர்களிடம் தென்படுகிறது. அதனால், வினா கட்டமைப்புக்கு உட்பட்டு, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை உள்ளடக்கி, வினாக்கள் கேட்கப்படும் போது, மாணவர்களிடம் அச்சம் ஏற்படுகிறது.தன்னம்பிக்கைஇந்த அச்சத்தை களைய, அனைத்து வினாக்களையும், தன்னம்பிக்கையுடனும், முழு புரிதலுடனும் பதிலளிக்க ஏதுவாக, புத்தகத்தில் உள்ள கருத்துக்களை முழுமையாக கற்றறிய வேண்டும் என, மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


பட்டியல் தயாரிக்க உத்தரவு

பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிப்பு பணி துவங்கியுள்ளது. மாணவர் பெயர் உள்ளிட்ட விவரங்களை உறுதிமொழி படிவத்துடன் பட்டியலாக தயாரிக்க, தலைமை ஆசிரியர்களுக்கு, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தரா தேவி உத்தரவிட்டுள்ளார். 
இப்பணிகளை, நவ., 16க்குள் முடித்து, தேர்வுத்துறை அறிவிக்கும் நாளில், தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என, அறிவுறுத்தப் பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.