Pages

Wednesday, November 18, 2015

வெள்ள நிவாரண நிதிக்கு 1 நாள் சம்பளம்; அரசு ஊழியர்கள் முடிவு

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்தது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், கடலூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகினர். இந்நிலையில் தமிழக அரசு ஊழியர்களும் வெள்ள நிவாரண நிதி வழங்க முன் வந்துள்ளனர். இதுகுறித்து தமிழ்நாடு அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் கே.கணேசன், நேற்று தலைமை செயலாளர் ஞானதேசிகன் மற்றும் முதல்வரின் தனி பிரிவு செயலாளர் ஆகியோருக்கு இதுகுறித்து கடிதம் அனுப்பியுள்ளார். 


அந்த கடிதத்தில், “தலைமை செயலகம் முதல் அனைத்து அரசு துறைகளிலும் பணியாற்றும் அலுவலக உதவியாளர்கள் மற்றும் அடிப்படை பணியாளர்கள் 2 லட்சத்து 34 ஆயிரம் பேர்களும், தங்களுடைய ஒரு நாள் சம்பளத்தை “வெள்ள நிவாரண நிதி”யாக  நவம்பர் மாத சம்பளத்தில் பிடித்தம் செய்துகொள்ள சம்மதிக்கிறோம்” என்று கூறியுள்ளார். அதேபோன்று அரசு அலுவலக ஒன்றியம் சார்பில் மாநில தலைவர் சண்முகராஜன், தமிழ்நாடு அரசு ஊர்தி ஓட்டுநர் சங்க மாநில தலைவர் ஜெயக்கொடி ஆகியோரும் ஒருநாள் சம்பளத்தை பிடித்தம் செய்ய அரசுக்கு கடிதம் எழுதியுள்ளனர். மொத்தத்தில் சுமார் 7 லட்சம் அரசு ஊழியர்கள் மேற்கண்ட 3 சங்கத்திலும் உள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.