ஓய்வூதியம் பெறுவதில் ஏற்படும் தாமதத்தை தடுக்க, அரசு ஊழியர்களின் பணி ஆவணங்களை ஆண்டுதோறும் ஆய்வு செய்ய, அனைத்து துறைகளுக்கும், மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இது தொடர்பாக, மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், பிறப்பித்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:மத்திய அரசின், பல்வேறு துறைகளில், 50 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள், பணியாற்றுகின்றனர். இவர்கள், ஓய்வு பெறும் போது, அவர்களின் பணி ஆவணத்தில் ஏற்படும் குளறுபடியால், அவர்களுக்கு, ஓய்வூதிய பலன்கள் பெறுவதில், காலதாமதம் ஏற்படுகிறது.
இதை தவிர்க்க, பணியாளர்களின் பணி ஆவணங்கள், ஆண்டுதோறும் ஆய்வு செய்யப்படவேண்டும். ஆவணத்தில் ஏதாவது தவறு இருந்தால், அது பற்றி, சம்பந்தப்பட்ட ஊழியருக்கும், துறையின் தலைமைக்கும் தெரிவித்து தீர்வு காணப்பட வேண்டும். இதை, குறிப்பிட்ட காலவரைக்குள், செய்து முடிக்க வேண்டும். அப்போது தான், ஓய்வு பெறும் போது, அதன் பலன்களை பெறுவதில், சம்பந்தப்பட்ட ஊழியருக்கு, எந்த தாமதமும் ஏற்படாது. இவ்வாறு, உத்தரவில், மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம், கூறியுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.