Pages

Monday, October 26, 2015

சென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு: அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியில், திருவள்ளூர் மாவட்ட ஆசிரியர்களுக்கு திருநின்றவூரில் உள்ள ஜெயா மெட்ரிக். மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்குகிறது

சென்னை மாவட்ட ஆசிரியர் கலந்தாய்வு வரும் 26, 27 மற்றும் 30ம் தேதிகளில் நடப்பதாக மாவட்ட கலெக்டர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக சென்னை கலெக்டர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கை: 2015-2016ம் கல்வி ஆண்டில் அரசு உயர், மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி  ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு வரும் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளிலும், இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்களிலிருந்து  பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பதவி உயர்வு கலந்தாய்வு வரும் 30ம் தேதியும் நடைபெறவுள்ளது.
சென்னை மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல் நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் பட்டதாரி ஆசிரியர்களது பொதுமாறுதல் கோரும் விண்ணப்பங்கள் இணையதளம் மூலமாக 31.07.2015 முதல் 07.08.2015 முடிய இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு சார்ந்த ஆசிரியர்களுக்கு  ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.  

இங்கனம் பொதுமாறுதல் விண்ணப்பங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்துள்ள ஆசிரியர்கள் மற்றும் புதியதாக மாறுதல் தேவைப்படும் பட்டதாரி ஆசிரியர்கள்  மற்றும் இடைநிலை, உடற்கல்வி ஆசிரியர்கள் மற்றும் சிறப்பாசிரியர்கள் பட்டதாரி ஆசிரியர்களுக்கான  பதவி உயர்வு பட்டியலில் இடம் பெற்றுள்ள ஆசிரியர்கள்,  மாவட்டத்துக்குள் மாறுதல் (பட்டதாரி, உடற்கல்வி ஆசிரிய்கள் நிலை-2) கோரும் ஆசிரியர்கள் 26ம் தேதி அசோக்நகரில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியிலும்,  மாவட்டம் விட்டு வேறு மாவட்டத்துக்கு மாறுதல் (பட்டதாரி, உடற்கல்வி ஆசிரியர்கள் நிலை-2) கோரும் ஆசிரியர்கள் 27ம் தேதி அசோக்நகர் அரசு மகளிர் மேல்நிலைபள்ளியிலும், பதவி உயர்வு கலந்தாய்வு கோரும் ஆசிரியர்கள்(இடைநிலை, உடற்கல்வ, சிறப்பாசிரியர்களிலிருந்து   பட்டதாரி ஆசிரியர்களாக) 30ம் தேதி  சைதாப்பேட்டை முதன்மை கல்வி அலுவலகத்திலும் கலந்தாய்வில் கலந்து கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.