அதீத பணிச்சுமையால், குடும்பமா? வேலையா? என நாமெல்லாம் போராடும் வேளையில், பிரான்சில் குறைந்த பணியே இருப்பதால் பலர் மன அழுத்தம் அடைவதாகத் தெரியவந்துள்ளது.
பிரான்ஸின் பணியமர்த்தும் சட்டங்கள் கடினமாக உள்ளதால் குறைவான வேலையுள்ள அலுவலகங்களிலும், எவரையும் பணிநீக்கம் செய்வதில் சிக்கல் அதிகமாக உள்ளது.
கிறிஸ்டியன் பவுரியான் என்கிற சமூகப் பொருளாதார பேராசிரியர், மேற்கொண்ட ஆய்வில் பிரான்ஸ் நாட்டில் கடந்த 2011-ம் ஆண்டு மட்டும் ஒரு லட்சத்து எண்பத்து நான்காயிரம் முறை ‘வேலையில் சலிப்பாக உள்ளது’ என்கிற வாசகத்தை பணிபுரிபவர்கள் நண்பர்களிடம் பகிர்ந்துள்ளனர்.
இதனை நேன்ஸி மெட்ஸ் ஐ.சி.என். தொழிற்பயிற்சி பள்ளியினர் உருவாக்கிய நிரல் மூலம் ஆய்ந்தறிந்துள்ளனர். அலுவலகத்தில் பணிச்சுமை குறைவாக இருக்கும் காரணத்தால்தான் அவர்கள் சலிப்பாக இருப்பதாகவும், இது மன அழுத்தத்துக்கு வழிவகுப்பதாகவும் பேராசிரியர் கிறிஸ்டியன் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி வெளியில் இதுவரை பேசாது இருந்த மக்கள் தற்போது இது தொடர்பாக வெளியில் பேசத்தொடங்கியுள்ளவர். இந்நாட்டின், அரசுப் பணியாளர் ஒருவர், 7.45 மணிக்கு காலை பணிக்குச் செல்கிறேன். ஆனால், காலை 8 மணிக்குப் பின்னர் எனக்கு வேலையே இல்லை’ எனக் குமுறுகிறார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.