Pages

Thursday, October 29, 2015

எஸ்.ஆர்.எம்., பல்கலை நுழைவுத்தேர்வு அறிவிப்பு

இன்ஜி., மற்றும் மருத்துவ படிப்புக்கான நுழைவுத் தேர்வை, எஸ்.ஆர்.எம்., பல்கலை அறிவித்துள்ளது.இதுகுறித்து பல்கலை வெளியிட்ட செய்திக்குறிப்பு:சென்னை எஸ்.ஆர்.எம்., பல்கலையில், 2016ம் ஆண்டு படிப்பில் சேர, 'ஆன்லைன்' நுழைவுத் தேர்வு ஏப்ரலில் நடக்கிறது. எஸ்.ஆர்.எம்., - ஜே.இ.இ.இ., தேர்வு, ஏப்., 19 முதல், 25ம் தேதி வரை; எஸ்.ஆர்.எம்., 'கீட்' மற்றும் 'கேட்' தேர்வு ஏப்., 23, 24ல் துவங்குகின்றன. 

இதற்கு மாணவர் பதிவு அக்., 19ல் துவங்கியுள்ளது; மார்ச், 15ல் முடிகிறது. தேர்வு பிரிவுக்கு, மார்ச், 26 முதல், 30ம் தேதி வரை பதிவு செய்யலாம். கூடுதல் விவரங்களுக்கு, www.srmuniv.ac.in இணையதளம், admissions.india@srmuniv.ac.in மெயில் மற்றும் 044 - 2745 5510, 4743 7500 போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.