Pages

Tuesday, October 20, 2015

மாணவர்களுக்குஓவிய போட்டி

அரசு மற்றும் தனியார் பள்ளிகளில், 'புனித நதி' என்ற தலைப்பில், ஓவியப் போட்டி நடத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து, மத்திய நீர்வளம் மற்றும் கங்கை நதி புனரமைப்பு அமைச்சகம் பிறப்பித்துள்ள உத்தரவு:நீர் வளத்தை பாதுகாத்தல், நதிகளை சுத்தமாக வைத்திருத்தல் குறித்து, மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், ஓவியப் போட்டி நடத்தப்பட வேண்டும்.
நிலத்தடி நீர் மாசுபடுதல், அதன் அபாயங்கள், தடுத்தல் மற்றும் புனித நதி போன்ற தலைப்புகளில் நடத்தப்படும் போட்டியில், தேசிய அளவில், மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, விருதுகள் வழங்கப்படும்.

இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.இதன்படி, அரசு, அரசு உதவி பெறும்மற்றும் தனியார் பள்ளிகளில், 6, 7 மற்றும், 8ம் வகுப்பு மாணவர்களுக்கு,ஓவியப் போட்டிகளை, 25ம் தேதிக்குள் நடத்தி முடிக்க, தமிழக பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.