Pages

Tuesday, October 27, 2015

ஊதிய விகிதக் குறைபாடுகள்: தலைமைச் செயலரிடம் மனு

மத்திய தலைமைச் செயலக உதவியாளர் நிலைக்கு இணையான ஊதியத்தை வழங்க வேண்டும் என தலைமைச் செயலர் கே.ஞானதேசிகனிடம் தலைமைச் செயலக சங்க நிர்வாகிகள், உதவிப் பிரிவு அலுவலர்கள் திங்கள்கிழமை கோரிக்கை மனுவை அளித்தனர்.இந்த மனுவில் கூறியிருப்பதாவது: தலைமைச் செயலகத்தில் 1,800 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் பொறியியல், கணினி உள்ளிட்ட சில பட்டப் படிப்புகளைப் படித்தவர்கள்.


1992-இல் மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு இணையாக, தமிழக தலைமைச் செயலகத்தில் பணியாற்றும் உதவிப் பிரிவு அலுவலர்களுக்கு அடிப்படை ஊதியமானது ரூ.1,640-ஆக உயர்த்தப்பட்டது. 2006-ஆம் ஆண்டு மத்திய அரசு உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியத்தை உயர்த்திய நிலையில், தமிழகத்திலும் அடிப்படை ஊதியமானது ரூ.6,500-ஆக அதிகரிக்கப்பட்டது.

இந்த நிலையில், இப்போது மத்திய தலைமைச் செயலக உதவியாளர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.12,540-ஆகவும், தர ஊதியம் ரூ.4,600-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டு கடந்த 6 ஆண்டுகளுக்கும் மேலாக வழங்கப்படுகிறது. இதேபோன்ற அளவில், தலைமைச் செயலக உதவிப் பிரிவு அலுவலர்களுக்கும், ஊதியத்தை உயர்த்த வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.