மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு மாநில அளவிலான பதிவுமூப்பு பரிந்துரைக்கப்பட உள்ளது. தகுதியுடையோர் சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அக்.,28 இல் பதிவு மூப்பு சரிபார்க்கலாம்.
இது குறித்து சிவகங்கை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் சுப்பிரமணியன் கூறியது: செவித்திறனற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிகளுக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான 31 இடைநிலை ஆசிரியர் பதவிக்கு இடைநிலை ஆசிரியர் பட்டயம், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-1 இல் தேர்ச்சி மற்றும் பார்வையற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலை பட்டயச் சான்று பெற்றிருத்தல் வேண்டும். பார்வையற்ற மாணவருக்கான,
11 பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிடத்திற்கு பி.ஏ. அல்லது பி.எஸ்.சி., அல்லது பி.லிட்.,பட்டப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி மற்றும் பார்வையற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் முதுநிலை பட்டயச் சான்று பெற்றிருத்தல் வேண்டும்.செவித்திறனற்ற மாணவருக்கான, 19 பட்டதாரி ஆசிரியர் காலி பணியிடங்களுக்கு பி.ஏ., அல்லது பி.எஸ்.சி., அல்லது பி.லிட்., பட்டப்படிப்புடன் ஆசிரியர் தகுதித் தேர்வு தாள்-2 இல் தேர்ச்சி மற்றும் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் முதுநிலை பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும்.
விடுதி காப்பாளர் பணி : மேலும் துணை விடுதி காப்பாளர் பணியிடத்திற்கு இடைநிலைஆசிரியர் பட்டயச் சான்றுடன், பார்வையற்ற மாணவருக்கானருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலைப் பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும். அதேபோல், துணை விடுதிக் காப்பாளர் காலியிடத்திற்கு இடைநிலை ஆசிரியர் பட்டயச் சான்றுடன் செவித்திறனற்ற மாணவருக்கான ஆசிரிய பயிற்சியில் இளநிலை பட்டயச் சான்று பெற்றிருக்க வேண்டும் என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.