Pages

Thursday, October 1, 2015

டி.என்.பி.எஸ்.சி.யில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு விண்ணப்பம் முதல் முதலாக சுயவிவர திட்டத்தில் விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணைய தலைவர்(பொறுப்பு) சி.பாலசுப்பிரமணியன் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: டி.என்.பி.எஸ்.சி.யில் தேர்வு எழுதுவோர் தனது விவரங்களை பதிவு செய்ய புதிய திட்டத்தை நேற்று அறிமுகப்படுத்தி உள்ளோம். அந்த திட்டப்படி முதல் முதலாக நகரமைப்பு மற்றும் ஊரமைப்பு துறையில் ஆராய்ச்சி உதவியாளர் பதவிக்கு ஆட்களை தேர்வு செய்ய விண்ணப்பம் கோரப்பட உள்ளது. இதற்கான அறிவிப்பு அக்டோபர் 5–ந் தேதி வெளியிடப்படும். இந்த தேர்வு டிசம்பர் 13–ந் தேதி நடைபெற உள்ளது.

புள்ளியல் துறை உதவி இயக்குனர் காலிப்பணியிடங்கள் 23 உள்ளது. அதற்கான எழுத்து தேர்வு முடிவடைந்து முடிவு அறிவிக்கப்பட்டது. நேர்முகத்தேர்வு அக்டோபர் 13–ந் தேதி நடத்தப்பட உள்ளது. நேர்முகத்தேர்வுக்கு 52 பேர் அழைக்கப்படுகிறார்கள். இந்து அறநிலையத்துறை செயல்அதிகாரி பணியிடங்கள் 58 உள்ளன. இதற்கு நேர்முகத்தேர்வு அக்டோபர் 14 மற்றும் 15 தேதிகளில் நடைபெற உள்ளது. இதற்கு 119 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.
வட்டார சுகாதார புள்ளியியலாளர் 49 பணியிடங்களுக்கு சான்றிதழ் சரிபார்த்தல் அக்டோபர் 19–ந் தேதி நடைபெறுகிறது. இதற்கு 196 பேர் அழைக்கப்பட்டுள்ளனர்.  இவ்வாறு சி.பாலசுப்பிரமணியன் தெரிவித்தார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.