Pages

Tuesday, October 13, 2015

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வுக்கு விண்ணப்பம் வரவேற்பு

இந்திய குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வில், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தேர்ச்சி அடைந்துள்ளதாக மத்திய பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) தெரிவித்தது. இதுகுறித்து யுபிஎஸ்சி-யின் செயலர் ஆஷிம் குரானா, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியது:

இந்த ஆண்டு ஐஏஎஸ் முதல்நிலைத் தேர்வுக்கு 9.45 லட்சம் பேர் விண்ணப்பித்தனர். அவர்களில் 4.63 லட்சம் பேர், கடந்த ஆகஸ்ட் மாதம் 23ஆம் தேதி நடந்த முதல்நிலைத் தேர்வை எழுதினர். நாடு முழுவதும் 71 நகரங்களில் உள்ள 2,186 மையங்களில் தேர்வு நடத்தப்பட்டது. முதல்நிலைத் தேர்வு முடிவுகள் 50 நாள்களுக்குள் வெளியிடப்படுவது இதுவே முதல் முறையாகும்.
தேர்வு செய்யப்பட்டவர்கள் அனைவரும், வரும் டிசம்பர் மாதம் 18ஆம் தேதி தொடங்க உள்ள முதன்மைத் தேர்வுக்கு, இணையவழியில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர் என்று ஆஷிம் குரானா தெரிவித்தார். இந்தத் தேர்வு முடிவுகளை www.upsc.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.