Pages

Tuesday, October 13, 2015

மருந்து கடைகள் நாளை 'ஸ்டிரைக்': இன்றே மருந்து வாங்குங்க...

நாடு முழுவதும், மருந்து வணிகர்கள் நாளை, 'ஸ்டிரைக்' நடத்துவதால், பொதுமக்கள், தேவையான மருந்துகளை முன்னதாகவே வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும்' என, டாக்டர்கள் அறிவுறுத்தியுள்ளனர். 'ஆன் - லைன்' வழி மருந்து விற்பனையை அனுமதிப்பது குறித்து, மத்திய அரசு ஆலோசித்து வருகிறது. 'இது, ஏற்கனவே உள்ள மருந்து வணிகர்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும். தரமற்ற, போலி மருந்துகள் வரத்துக்கும் வழி வகுக்கும்' எனக்கூறி, இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனம் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. 

மத்திய அரசின் முயற்சியை கைவிடக்கோரி, நாளை, நாடு முழுவதும் மருந்து வணிகர்கள், ஸ்டிரைக் அறிவித்துள்ளனர். இதனால், எட்டு லட்சம் மருந்து கடைகள் மூடப்படுகின்றன. 'தமிழகத்தில் உள்ள, 30 ஆயிரம் மருந்து கடைகளும், இன்று இரவு, 12:00 மணி முதல், நாளை நள்ளிரவு, 12:00 மணி வரை, 24 மணி நேரத்திற்கு மூடப்படும்' என, தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.