Pages

Friday, October 16, 2015

அப்துல் கலாம் பிறந்த நாள் விழா

தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில் அப்துல் கலாம் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவிற்கு வந்திருந்தோரை ஆசிரியை கலாவல்லி வரவேற்றார். தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம்  தலைமை தங்கினார். அப்துல் கலாம் தொடர்பான பேச்சு போட்டி,கவிதை போட்டி, ஓவிய போட்டி,கட்டுரை போட்டிகள் நடைபெற்றன.வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
பேச்சு போட்டியில் மாணவி தனலெட்சுமி,ராஜேஸ்வரி,காயத்ரி மாணவர்கள் ராஜேஷ்,ரஞ்சித்,ஐயப்பன்,கண்ணதாசன் ஆகியோர் வெற்றி பெற்று பரிசுகள் பெற்றனர்.அப்துல் கலாமின் கனவுகள் தொடர்பாகவும்,அதனை மாணவர்கள் நிறைவேற்றுவது தொடர்பாகவும் மாணவர்கள் பேசினார்கள்.அப்துல் கலாம் தினத்தை ஒட்டி  இந்திய வல்லரசாக மாணவ,மாணவியர் அவரது உருவ படத்தின் முன்பாக பிரார்த்தனை செய்தனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.