Pages

Sunday, October 18, 2015

தமிழகத்தில் உள்ள ஆசிரியர்களின் குறைகளை தீர்க்க கமிட்டி அமைக்க வேண்டும்; மாநில அரசுக்கு மத்திய அரசு உத்தரவு

பள்ளி ஆசிரியர்களின் குறைகளைத் தீர்க்க, நான்கு கமிட்டிகள் அமைக்க வேண்டும் என, மாநிலங்களுக்கு, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
அதன் விவரம்:
* பள்ளி வாரியாக குறை தீர்ப்புக் குழு அமைத்து, ஆசிரியர்களின் குறைகளை கேட்க வேண்டும் 
* அதில், குறைகளைத் தீர்க்க முடியாவிட்டால், வட்டார வள மைய அதிகாரி தலைமையிலான, வட்டார கமிட்டி விசாரித்து, 30 நாட்களுக்குள் குறைகளைத் தீர்க்க வேண்டும்

* அதற்கு மேல், கலெக்டர் தலைமையில் அமைக்கப்படும் மாவட்ட கமிட்டி, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கூடி, ஆசிரியர்களின் குறைகளை களைய நடவடிக்கை எடுக்க வேண்டும் 
* இறுதியாக, மாநில அளவில், தொடக்கக் கல்வி இயக்குனரை தலைவராக கொண்ட கமிட்டி அமைக்க வேண்டும். இந்தக் கமிட்டி, ஆறு மாதங்களுக்கு ஒருமுறை கூடி, குறைகளை தீர்த்து வைக்க வேண்டும்
* ஆசிரியரின் பணி விதிமுறைகள், பதவி உயர்வு, நிதி சார்ந்த கோரிக்கைகள், ஒழுங்கு நடவடிக்கை மற்றும் தண்டனை தொடர்பான குறைகளை, இந்தக் கமிட்டிகள் 
விசாரிக்காது. மத்திய மனிதவள அமைச்சகத்தின் இந்த உத்தரவால், எந்த பலனும் ஏற்படாது என, ஆசிரியர்கள் குறை கூறிஉள்ளனர். இதுகுறித்து, பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு தலைவர் பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது:ஏற்கனவே, அனைவருக்கும் கல்வி இயக்கக திட்டத்தில், கிராம கல்விக் குழு என்ற குறை தீர்ப்பு கமிட்டி இருக்கிறது; ஆனால், அது முறையாக செயல்படவில்லை என்ற குறையே இன்னும் போக்கப்படவில்லை. 
பணி விதிமுறைகள், பதவி உயர்வு, ஒழுங்கு நடவடிக்கை போன்றவற்றை ஆய்வு செய்யாமல், ஆசிரியர்களின் குறைகளை எப்படி தீர்க்க முடியும்? இவ்வாறு அவர் கூறினார்.- நமது நிருபர் -

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.