Pages

Tuesday, October 6, 2015

பேச்சு வார்த்தை நடத்த ஜேக்டோவுக்கு அவசர அழைப்பு

பள்ளிக்கல்வித்துறைச் செயலர் மதிப்புமிகு சபிதா அவர்கள் பள்ளிக்கல்வி மற்றும் தொடக்கக்கல்வி இயக்குநருடன் இன்று மாலை அவசர ஆலோசனையில் ஈடுபட்டார். இதற்காக தொடக்கக்கல்வி இயக்குநர் அவசரமாக சிவகங்கையிலிருந்து சென்னை புறப்பட்டார். ஆலோசனை கூட்டம் நிறைவடைந்த சிறிது நேரத்தில் ஜேக்டோ உயர்மட்ட குழு உறுப்பினர்களுக்கு அழைப்பு வந்தது.
நாளை இயக்குநர் தலைமையில் முதற்கட்ட பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.
பேச்சு வார்த்தையில் பங்கேற்பதற்காக தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாநிலப் பொதுச் செயலாளர் திரு.செ.பாலச்சந்தர் அவர்கள் அவசர பயணமாக கன்னியாகுமரியிலிருந்து சென்னை புறப்பட்டார்.
இயக்குநர் அளவிலான பேச்சுவார்த்தைக்கு பின்னால் கல்வித்துறை முதன்மைச் செயலாளர் மதிப்புமிகு.சபிதா அவர்கள் ஜேக்டோவுடன் பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக நம்பதகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.