இளநிலை உதவியாளர் 32 பணிக் காலியிடங்களுக்கு பதிவு மூப்புள்ளோர் பரிந்துரைக்கப்பட இருப்பதால், வியாழக்கிழமை (அக்.1) மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்திற்கு தகுதியுடையோர் வந்து பரிந்துரை விவரத்தினை தெரிந்து கொள்ளுமாறு ஆட்சியர் அலுவலகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்தி குறிப்பு விவரம்: சென்னையில் உள்ள முதன்மைச் செயல் அலுவலரால் அறிவிக்கப்பட்ட 32 இளநிலை உதவியாளர் பணிக் காலியிடத்துக்கு தகுதியுடையோர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.மாநில அளவில் பதிவு மூப்பு மற்றும் தகுதியுடைய பதிவுதாரர்கள் ராமநாதபுரம் மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தின் மூலம் பரிந்துரைக்கப்படவுள்ளனர்.
கல்வித் தகுதியாக ஏதாவது ஒரு பட்டப்படிப்புடன் கணினிச் சான்றிதழ் பெற்று பதிவு செய்திருக்க வேண்டும்.வயது வரம்பைப் பொறுத்தவரை கடந்த 1.7.2015இன் படி பிற்பட்ட வகுப்பினர் முஸ்லிம்களில் 18 முதல் 30 வயது வரை பரிந்துரைக்கப்படுவர். அரசு விதிமுறைகளின் படி வயது வரம்பில் தளர்வு இல்லை.உத்தேச பதிவு மூப்பு அடிப்படையில் பிற்பட்ட வகுப்பினரில் முஸ்லிம் 25.6.2007, பிற்பட்ட வகுப்பினரில் முஸ்லிம் மாற்றுத் திறனாளிகள் 5.2.2001 வரையும் பரிந்துரைக்கப்படுவர்.
இத்தகுதியுடைய பதிவுதாரர்கள் இளைநிலை உதவியாளர் பணிக்கு பரிந்துரை செய்யப்பட இருப்பதால், ராமநாதபுரம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்துக்கு வியாழக்கிழமை (அக்.1) நேரில் அனைத்துச் சான்றிதழ்களோடும் வந்து பரிந்துரை விவரத்தினைதெரிந்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.