Pages

Friday, October 30, 2015

நாக் அங்கீகாரம் பெற குறுக்கு வழி; கல்லூரிகளுக்கு எச்சரிக்கை

மத்திய அரசின் தேசிய அளவீடு மற்றும் ஆய்வுக் குழுவான, நாக் அங்கீகாரம் பெற, ஏஜன்டுகளை அணுக வேண்டாம் என, கல்லுாரிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


பல்கலை மற்றும் கல்லுாரி களை கட்டுப்படுத்தும், பல்கலைக்கழக மானிய குழுவான, யு.ஜி.சி.,யின், 2012ம் ஆண்டு வழிகாட்டு விதிகளின்படி, கல்லுாரிகள் நிதியுதவி பெற, பல நிபந்தனைகள் வகுக்கப்பட்டு உள்ளன. அதன்படி, கல்லுாரிகள், நாக் நிறுவன தர அங்கீகாரம் பெற்றிருக்க வேண்டும். 

கல்லுாரிகளை ஆய்வு செய்து, ஏ, பி, என, பல கிரேடுகளில், தர அங்கீகாரம் வழங்கப்படுகிறது. யு.ஜி.சி., மானியம் பெற, 2015 டிசம்பருக்குள், கட்டாயம் நாக் அங்கீகாரம் பெற வேண்டியது அவசியம். அதனால், பல பல்கலைகளும், கல்லுாரிகளும், இடைத்தரகர்கள், ஏஜன்சிகளைப் பிடித்து, குறுக்கு வழியில் முயற்சிக்கின்றன. இந்நிலையில், அனைத்து கல்லுாரிகளுக்கும், மத்திய அரசு சார்பில், எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

அதில் கூறப்பட்டுள்ளதாவது: 

நாக் அங்கீகாரம் பெற, பல சட்ட விதிமுறைகள் உள்ளன. நாக் நிபுணர் குழு, நேரடி ஆய்வு செய்து, தகுதி இருந்தால் மட்டுமே அங்கீகாரம் வழங்கும்.சமீப காலமாக, நாக் அங்கீகாரம் பெறுவது எப்படி; அதற்கு அறிக்கை தயார் செய்வது எப்படி; யாரை அணுக வேண்டும் என, பயிற்சி கருத்தரங்குகளை, சில நிறுவனங்கள் நடத்துகின்றன. கல்லுாரிகள், அந்த நிறுவனங்களை அணுகுவதாக, புகார்கள் வந்துள்ளன.

நாக் அங்கீகாரம் வழங்க, எந்தவித ஏஜன்சியோ, இடைத்தரகர்களோ நியமிக்கப்படவில்லை. எனவே, கல்லுாரிகள் இடைத்தரகர்களை அணுகுவதை தவிர்க்க வேண்டும். அந்த நிறுவனங்களால், அங்கீகாரம் பெற்றுத்தர முடியாது. இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.