Pages

Saturday, October 31, 2015

செல்வமகள் சேமிப்பு கணக்கு தொடங்க சலுகை காலம் தபால் துறை அறிவிப்பு

தபால் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: பெண் குழந்தைகளை ஊக்குவிப்பதற்காக மத்திய அரசு ‘‘சுகன்யா சம்ரித்தி’’ என்ற செல்வமகள் சேமிப்பு கணக்கு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. நாடு முழுவதும் தொடங்கப்பட்ட 73 லட்சம் கணக்குகளில் 11 லட்சம் கணக்குகள் தமிழகத்தில் தொடங்கப்பட்டு உள்ளன. இந்ததிட்டத்தில் இதுவரை ரூ.2 ஆயிரத்து 328 கோடி முதலீடு பெறப்பட்டுள்ளது.

10 வயதுக்கு உட்பட்ட பெண் குழந்தைகளுக்காக மட்டும் தொடங்கப்பட்டாலும், தற்போது 2 ஆண்டுகள் சலுகை வழங்கப்பட்டு உள்ளது. அதன்படி 2003 டிசம்பர் 3–ந் தேதி முதல் 2005–ம் ஆண்டு டிசம்பர் 2–ந் தேதி வரை பிறந்த பெண் குழந்தைகள் இத்திட்டத்தில் வரும் டிசம்பர் 1–ந் தேதி வரை சேரலாம். இந்த தேதிக்கு பிறகு 10 வயது வரையுள்ள பெண் குழந்தைகள் மட்டுமே சேர முடியும். அனைத்து அஞ்சல் அலுவலகங்களிலும் ஆயிரம் ரூபாய் செலுத்தி கணக்கு தொடங்கலாம். அதன்பிறகு ரூ.100 அல்லது அதன் மடங்காக செலுத்தலாம். இதற்கு 9.2 சதவீதம் வட்டி அளிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

2 comments:

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.