Pages

Monday, October 12, 2015

அரசு பள்ளிகளில் கணினி கல்வி சாத்தியமா?

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் பயிலும்ஏழை,எளிய,கிராமப்புற மாணவர்களை கருத்தில் கொண்டு ஒன்று முதல் பத்தாம் வகுப்புவரை கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்படமாக கொண்டுவர வேண்டும்.அரசு பள்ளியில் பயிலும் ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் கல்வித் தரத்தை உயர்ந்தும் நோக்கிலும் அரசு பள்ளி மற்றும் மாணவர்களின் எதிர் காலத்தை கருத்தில் கொண்டு "ஆரம்ப கல்வி முதல் (ஒன்றாம் வகுப்பிலிருந்து பத்தாம்வகுப்பு வரை)கணினி கல்வியாக கட்டாயக்கல்வியாக கொண்டுவர வேண்டும் .


மேனிலைப்பள்ளி தற்போது தரம் உயர்த்தப்பட்ட மேனிலைப்பள்ளிகளில் (11மற்றும்12ஆம் வகுப்பு) பல பள்ளியில் கணிப்பொறி அறிவியல் பாடம் இல்லை. ஆசிரியர்களும்இல்லை கணிப்பொறி அறிவியல் பாடம் கொண்டு வரவேண்டும். குறிப்பு(அரசு பள்ளியில் மாணவர்கள்அதிகம் கணினி அறிவியல் பாடத்தைத் தேர்வு செய்கின்றனர்).மாணவர்களின் விகிதம் அடிப்படையில் ஆசிரியர் பணியிடங்களை ஏற்படுத்த வேண்டும்.
குறிப்பு(300க்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கும் அரசு மேனிலைப்பள்ளியில் ஒரு கணினி ஆசிரியர் மட்டும் உள்ளார்).சமச்சீர் கல்வியில் 6 முதல் 10 வகுப்பு வரை கணினி அறிவியல் பாடம்புத்தகங்கள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது மாணவர்கள் மத்தியில் பெறும்வரவேற்ப்பை பெற்றது ஆனால் சில மாதத்தில் கைவிடப்பட்டது.(அனைத்து தனியார் பள்ளிகளிலும் கணினி அறிவியல் பாடம் கட்டாயப்பாடமாக உள்ளது).
மாணவர்களின் நலனுக்காக....
புதிய கல்விக் கொள்கையில் கணினி அறிவியல் பாடத்தை கட்டாயப்பாடமாக அறிவிக்கவேண்டும். (December ல் புதிய கல்வி கொள்கை _ ஸ்மிருதி இரானி உறுதி .மக்களிடம் கருத்துக் கேட்கப் படும் என அறிவிப்பு தங்கள் ஒருவரின் உதவியால் கூட 1ஆம் வகுப்பு முதல் 10 ஆம் வரைகணினி அறிவியல் கல்வியை தமிழகத்தில்கொண்டுவர முடியும்).DIGITAL இந்தியா திட்டத்தில் கீழ் கணினி அறிவியல் பாடத்தை ஒன்றாம் வகுப்பு முதல் கட்டயப்படமாக கொண்டுவரவேண்டும்.(இந்தியாவின் வாழும் கோடிக்கணக்காண ஏழை எளிய கிராமப்புற மாணவர்கள் பயன்பெறுவர்).21000க்கும் மேற்பட்ட கணினி ஆசிரியர்களின் குடும்பத்தின் வாழ்வாதாரக் கோரிக்கைக்கு செவி கொடுக்குமா தமிழக அரசு....
1992 ஆம் ஆண்டிலிருந்து இன்று வரை 21000 பேருக்கும் மேற்பட்ட பி.எட் கணினி ஆசிரியர்கள் உள்ளனர் .அனைவரும் (TNTEU)பட்டம் பெற்றோம் .(நாங்கள் பெற்ற பட்டம் இன்று பயன் இல்லாமல் வறுமையில் வாடுகின்றோம் )
1)TET ,TRB போன்ற ஆசிரியர் தகுதித் தேர்வு இல்லை.
2) AEEO, DEO தேர்வுக்கு அடிப்படை கல்வி B.ED. கணினி அறிவியல் B.ED பெற்றஅதிலும் எங்களுக்கு வாய்ப்பு இல்லை.
3)பகுதிநேர ஆசிரியர்கள் பணியிலும் எங்களுக்கு வாய்ப்புகள் இல்லை.
திரு வெ.குமரேசன்
மாநிலச் செயலாளர்
9626545446.

தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

1 comment:

  1. ஐயா வணக்கம். மேல்நிலைப் பள்ளிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட முதுகலை கணிணி ஆசிரியர்கள் நியமனம் தொடர்பான நீதிமன்ற வழக்கு மற்றும் அவர்களின் பணிநியமன தற்போதைய நிலையைத் தெரிவிக்கவும். நன்றி வணக்கம்.

    ReplyDelete

உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.