அரசு தேர்வுத் துறை சார்பில், கலைப்பாட தொழில்நுட்ப தேர்வு, ஆண்டு தோறும் நடத்தப்படும். தென் இந்தியாவில், தமிழகத்தில் மட்டுமே இந்த தேர்வு நடத்தப்படுகிறது. ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இருந்தும் இந்த தேர்வு எழுத தமிழகத்துக்கு வருவர்.எட்டாவது படித்தவர் இளநிலை (லோயர்), 10ம் வகுப்பு முடித்தவர் உயர்நிலை (ஹையர்) சான்றிதழ் தேர்வு எழுதுவர் ஓவியம், தையல், அச்சுக்கலை, சிற்பம், விவசாயம், கைத்தறி போன்ற பாடங்களுக்கு தேர்வு நடத்தப்படும்.
இதில் தேர்ச்சி பெறுபவர்கள், தமிழக அரசின் மூன்று மாத ஆசிரியர் பயிற்சி பெற்ற பிறகு, சிறப்பாசிரியர்களாக வேலையில் சேர முடியும். 2012ல், 16 ஆயிரம் பேர், பகுதி நேர சிறப்பாசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.கேரளா, ஆந்திரா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் துவக்கப் பள்ளி ஆசிரியர் பணி வழங்குகின்றனர். இந்த ஆண்டுக்கான, தேர்வுக்கான விண்ணப்ப வினியோகம் நேற்று துவங்கியது. முதல் நாளிலேயே, விண்ணப்பிக்க ஆளின்றி சேவை மையங்கள் காலியாக இருந்தன. இதற்கு சரியான வேலை வாய்ப்பு கிடைக்காது என்பதால், தேர்வு எழுதுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்துள்ளது.
கலை ஆசிரியர் நலச்சங்க தலைவர் ராஜ்குமார் கூறுகையில், 'சிறப்பாசிரி யர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வில்லை. ஏற்கனவே தேர்ச்சி பெற்றவர்களுக்கு, மூன்று மாத பயிற்சி வகுப்பை, எட்டு ஆண்டுகளாக, அரசு நடத்தவில்லை. இதனால், 55 ஆயிரம் பேர் வேலையில்லாமல் தவிக்கின்றனர்' என்றார்.
No comments:
Post a Comment
உங்களுடைய COMMENTஐ பதிவு செய்யும் ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பார்வையாளர்கள் தங்கள் பொறுப்பை உணர்ந்து பதிவு செய்யப்படவேண்டும். தனிப்பட்ட நபர்களின் மனதை புண்படுத்தும் வகையில் நடந்துகொள்ள வேண்டாம் என கேட்டுகொள்ளப்படுகிறது.